Browsing: A.RAJA

ஆ.ராசா வாழ்வில் வலிமிகுந்த இன்னொரு கட்டம்! – LRJ

சமகால அரசியல்வாதிகளின் மனைவிகளில் அதிகபட்ச சோதனைகளையும் மன உளைச்சலையும் அலைச்சலையும் சந்தித்தவர். இந்திய ஒன்றிய அரசாங்கத்தையும் அதன் பிரதமர்களையும் ஒரு பத்தாண்டுகாலம் நிர்ணயிக்கும் வலிமைபெற்றிருந்த திமுக என்கிற மாநில கட்சியையும் அதன் தலைவர் கலைஞரையும் குறிவைத்து டில்லி சுல்தானியமும் அதன் சூத்ரதாரிகளான முப்புரிநூலோரும் சேர்ந்து உருவாக்கிய திட்டமிட்ட சதிவலையில் பாரதப்போரின் அபிமன்யுவைப்போல் மோசமாக சிக்கிக்கொண்டவர் ஆ ராசா. ஒட்டுமொத்த ஹிந்திய சர்வாதிகார நிறுவனங்களாலும் ராசா துரத்தித்துரத்தி வேட்டையாடப்பட்டபோது ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக ஆ ராசா ஒருபக்கம் தன்…

வழக்கு போட்ட எடப்பாடிக்கு நன்றி சொன்ன ஆ.ராசா

திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2ஜி உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியளித்தார். இதற்கு பதிலளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இதுதொடர்பாக தன்னுடன் விவாதிக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக சமீபத்தில் நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ஜெயலலிதாவை சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என்றும், முதல்வர் பழனிசாமியையும் விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாநில இணை செயலாளர் செல்வகுமார் அளித்த புகாரின்…

முதல்வர் எடப்பாடிபழனிச்சாமிக்கு ஆ.ராஜா பகிரங்க கடிதம் முழுமையாக

சேலத்தில் டிசம்பர்3ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2 ஜி வழக்கில் ஊழல் செய்தது திமுக எனக் குற்றம்சாட்டினார். இதற்கு உடனடியாக பதில் கொடுத்த திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, ஊழல் செய்தது யார்? ஊழல் செய்து தண்டனை பெற்றது யார் என முதல்வருடன் கோட்டையில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக ஊடகங்கள் மத்தியில் அறிவித்தார் ஆனால் சிபிஐ உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் ராசா தப்பிவிட்டதாக சொன்னார் முதல்வர். மீண்டும் ஆ.ராசா விவாதத்திற்கு…

ஜெயலலிதாவை அவமதித்தால் ராசாவின் கைகள் வெட்டப்படும் – கடம்பூர் ராஜு

ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடித்தால் ஆ.ராசாவின் கைகள் வெட்டப்படும் என கடம்பூர் ராஜு பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. 2ஜி விவகாரம் தொடர்பாக திமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட, இதுதொடர்பாக முதல்வருடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என அறிவித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, ஜெயலலிதாவைச் சட்டத்துக்கு விரோதமாகச் சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் தொடர்ந்து வருகிறது. ஸ்டாலின், ஆ.ராசா இருவரையும்…

குரைப்பவர்கள் மீது திமுக தலைமை ஏன் சட்டநடவடிக்கை எடுக்கக்கூடாது?

தெரு நாய் மாதிரி குரைக்கிறார்கள். மல்லுக்கு கூப்புடுறது மாதிரி ஆவேசப்படுகிறார்கள்.  ஆனா, அவுங்க ஆத்தாவை கொள்ளைக்காரினு உச்சநீதிமன்றம் சொல்லிருக்கா இல்லையான்னு ஆ.ராசா கேட்டதுக்கு பதிலே சொல்லலை…  தீர்ப்பில் அந்த வாசகத்தை ஆ.ராசா சுட்டிக்காட்டுறாரு. எந்த தீர்ப்பை, குன்ஹா அளித்த தீர்ப்பைத்தான் உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்று தீர்ப்பளித்திருக்கிறது. அதில் இருக்கிறது என்கிறார்.  இதுல என்னா கூத்துனா, ரெண்டு பேர் பிரஸ் மீட்டுக்கும் போனவனுக, அந்த தீர்ப்பு காப்பியை எடுத்துட்டுப் போயி இதுக்கு என்னா சொல்றீங்கனு மூஞ்சியில் தூக்கிப் போடல…

“எது ஊழல் கட்சி? நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” – எடப்பாடி பழனிசாமிக்கு ஆ.ராசா MP சவால்

“அ.தி.மு.க ஊழல் கட்சியா அல்லது தி.மு.க ஊழல் கட்சியா என்பதை நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க முதல்வர் தயாரா?” என எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., சவால் விடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க ஊழல் கட்சி என விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும்வண்ணம் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் என்.ஆர்.இளங்கோ எம்.பி ஆகியோர் சற்றுமுன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க…