Browsing: accident

பைக்கில் சென்ற தாய், மகள் உயிரிழப்பு: மழைநீர் வடிகால்வாயை மூடுமாறு வலியுறுத்தும் ஸ்டாலின்

பைக்கில் சென்ற தாய் மற்றும் மகள் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, மழைநீர் வடிகால்வாயை உடனே மூட வேண்டும் என அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து தாய் கரோலினா, அவரது மகள் இவாலின் ஆகிய இருவரும் உயிரிழந்த கொடூரமான நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட…

ஜெர்மனியில் பயங்கரம்! பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதிய கார்: 2 பேர் பலி பலர் படுகாயம்

ஜெர்மனியில் பாதசாரிகள் மீது திடீரென்று கார் மோதியதால், இதில் 2 பேர் பலியாகியிருப்பதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் Trier நகரில் சற்று முன் பாதசாரிகள் மீது திடீரென்று கார் ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்து காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்திருப்பதாக, Trier நகரின் மேயர் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது போலீசார் முதற்கட்ட விசாரணையில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதை உறுதிபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

சூரத் ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து: அதிகாலையில் பயங்கரம்

குஜராத் மாநிலத்தில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் திடீரென இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3:30 மணியளவில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற நகரில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக அந்த ஆலையில் உள்ள பாய்லர்கள் வெடித்து சிதறியதாகவும், அதன் சத்தம் பல கிலோமீட்டருக்கு கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ள…

கமல்ஹாசனுக்கு கார்டூனிஸ்ட் மதன் ஏற்படுத்திய நெருக்கடி

இந்த வருடம் பிப்ரவரி 19 ஆம் தேதியன்று EVP படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்தியன்- 2 படப்பிடிப்பு இடைவேளையில் கிரேண் இடமாற்றம் செய்த போது அது முறிந்து விழுந்து நடந்த விபத்தில் மூன்று பேர் உயிர் இழந்தனர். அவர்களில் உதவி இயக்குநர் கிருஷ்ணாவும் ஒருவர். அவர் கார்டூனிஸ்ட் மதனின் இளைய மகள் அமிதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். விபத்தில் அவர் பலியானதை முன்னிட்டு நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தயாரிப்பு நிறுவனமான லைகா,…

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட் குடும்பத்தினருக்கு நிதியுதவி

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த வருடம்பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு சென்னை EVP பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் கமலஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும்படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் தானும் நூலிழையில் தப்பித்ததாகத் தெரிவித்தார்.தொடர்ந்து…

புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 23 பேர் உயிரிழப்பு…!

சமீப நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவும் டிரக்கிலும் திரும்பும் வழியில் பல்வேறு விபத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. அண்மையில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் ஓய்வெடுத்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் 17 பேர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து உத்திரப்பிரதேசம் நோக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். ஆரையா என்ற பகுதியில்…