Browsing: actor surya

கே வி ஆனந்த் என்றொரு கேமராக் காதலன் – LR. JAGATHESAN

முகத்தில் எப்போதும் முகிழ்க்கும் சிரிப்பு; அதில் நிரந்தரமாய் ஒளிந்திருக்கும் குரும்பு; தோளில் தொங்கும் கேமெரா பை; கனமான சரீரம். ஆனால் அவனது சுறுசுறுப்புக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அப்படித்தான் கே வி ஆனந்த் எனக்கு அறிமுகமானான். அடையாரில் இருந்த ASIDE என்கிற சென்னை நகர சஞ்சிகையின் அலுவலகத்தில். பார்த்த உடன் பிடித்துப்போகச்செய்யும் இயல்பு அவனுக்கு. எல்லோரோடும் நட்போடும் இயல்பாகவும் எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகக்கூடியவன். அவனோடு ஒரே ஒருமுறை பழக நேர்ந்தாலும் உங்களுக்கு அவனை கண்டிப்பாக பிடித்துப்போகும்…

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் – சூர்யா

சூர்யா நடித்து, தயாரித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம் இன்று நள்ளிரவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட ப்ரோமோஷன் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களிடம், சூரரைப் போற்று படத்தின் இணையதளத்தில் தங்களது கையெழுத்தை பகிருமாறும், ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் கூறிருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களது கையெழுத்தை, அந்த இணையதளத்தில் பகிர்ந்தனர். இந்தநிலையில், கூறியவாறே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார் சூர்யா.  சூரரைப் போற்று இணையதளத்தில் பகிரப்பட்ட கையெழுத்துகள், ஸ்பேஸ் பலூன் மூலம் வானின் உயரமான இடத்திற்குப் பறக்கவிடப்பட்டுள்ளது. ஜெர்மனி குழு ஒன்று இதனைச் செய்துள்ளது. ரசிகர்களின் கையெழுத்துகள் பறக்கவிடப்பட்டதை, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் …

ஜோதிகாவும் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாத கோவில்களும்!

நடிகை ஜோதிகா அப்படி என்னத்த சொல்லிட்டாங்கனு இப்படி பொங்குறாங்களோ தெரியலை. கோவில் உண்டியலில் போடுவதைப் போல பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் பண உதவி செய்யுங்கனு சொன்னது தப்பா? இதுக்கு பார்ப்பனர்கள் பொங்குறாங்கனா அதுல ஒது நாயம் இருக்கு. உண்டியல் வருவாய் போச்சுனா, அவுங்க வருவாய் போச்சு. ஆனால், ராஜராஜனின் பரம்பரைனு சொல்லிட்டு ஒருத்தர் ஏன் ஜோதிகாவை காய்ச்சி எடுக்கிறார்னுதான் தெரியல. கோவில் கட்டியதையும், நாடுகளுடன் சண்டையிட்டதையும், அதுவும் சக தமிழர்களோடு சண்டையிட்டதையே பெருமையாக பேசும் ஆண்ட பரம்பரைகளுக்கு என்னத்த…