Browsing: Actor

புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமலஹாசன் ஆதரவு

தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கென்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளன. நான்காவதாக இப்போது, தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவராக இயக்குநர் பாரதிராஜா பொறுப்பேற்றிருக்கிறார். இதற்கு கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், புதிய சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இது சம்பந்தமாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள பதிவில்…. முடக்கத்தையுடைத்து முயற்சியெடுக்கையில் முன்னேர்…

சுற்றுச்சூழல் தாக்க(EIA) மதிப்பீட்டு விதிக்கு எதிராக நடிகர் கார்த்தி கண்டனம்

நமது பாதிப்புகளை நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான சட்டம் என்று நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பு உள்ளார்… சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு அறிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இந்நிலையில் உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகர் கார்த்தி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 கொண்டு வருவதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார். உழவன் பவுண்டேசன் சார்பில் அவர் வெளியிட்டுள்ள…

விஜய் ஆண்டனி பிறந்த நாளில் பிச்சைகாரன் – 2 பட அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு 24.7.2020 அன்றுவெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, “எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில்…

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல்முறையாக சூர்யா நடிக்கும் வாடிவாசல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது. ‘காப்பான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘அருவா’, ‘வாடிவாசல்’ திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளார் இதில் ‘வாடிவாசல்’ திரைப்படம் சூர்யா நாயகனாக நடிக்கும் 40வது படம்வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும். இப்படத்தைத் விகிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை…

கருத்துவேறுபாட்டில் கௌதம்மேனன் – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் இதன் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்புநடத்தவேண்டியிருக்கிறதுஇந்தப் படத்தின் டீசர் வெளியாகி சிறப்பானவரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘நான் உன் ஜோஷ்வா’ என்ற பாடல் காணொலி வடிவில் இன்று ஜூலை…

கருத்து சொல்லிவிட்டு போவதில் எனக்கு உடன்பாடில்லை

கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடைபெறவில்லை இதன் காரணமாக நடிகர்கள் வீடுகளிலேயே குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்கள். இந்தக் கொரோனா ஊரடங்கில் கமலுடன் நேரலையில் உரையாடியது, ரசிகர் மன்றப் பணிகள், கதைகள் படிப்பது, கதை விவாதம், குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது என தன் பொழுதைக் கழித்து வருகிறார் விஜய் சேதுபதி. சில மாதங்களுக்கு முன்பு வரை தனது சமூக வலைதளபக்கத்தில் பிரச்சினைகளுக்கு கருத்து சொல்லி வந்தார். ஆனால், இப்போது பேட்டிகளில் மட்டுமே தனது கருத்தைப் பதிவு செய்து வருகிறார்.…

அமிதாப்பச்சனையும் விடாத கொரானா தொற்று

இந்திய சினிமாவில் மூத்த நடிகர், தன் வயதுகேற்ற வேடங்களில் நடித்து, இன்றைக்கும் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர், வீட்டிலிருந்த பிற வேலையாட்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து கொரோனா…

பேரின்பப்படுத்தும் கொரோனா லாக்டவுன் – நடிகர் பிரகாஷ் ராஜ்

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது…

நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் – கமலஹாசன்

பிரதமர் நரேந்தி மோடி அவர்கள் நேற்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது வரும் 5-ஆம் தேதி நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு பால்கனிக்கு வந்து அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும் என்றும் அல்லது மொபைல் டார்ச் அல்லது டார்ச் லைட்டை ஒளிவிட செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் இதன் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை நிரூபிக்கலாம் என்றும் அவர் கூறினார். பிரதமரின் இந்த யோசனையை ஒரு சில…