Browsing: AIADMK

அதிமுகவைக் காட்டிலும் திமுக என்ன சொம்பையா?

இந்தக்கேள்வி கொஞ்சம் கடுமையாக இருந்தாலும், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் இப்படித்தான் கேட்கிறார்கள். 2019 நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. உடனடியாக கட்சி நிர்வாகத்தையும் அதிமுகவில் மாற்றிவிட்டார்கள். ஆனால், திமுகவில் தொடர்ந்து காஞ்சி வடக்கு மாவட்ட திமுக என்றும், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக என்றும் நீடிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளும் இருக்கின்றன. இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்றும்,…

திமுகவுககு எதிரில் இருப்பது அதிமுக அல்ல ஆர்எஸ்எஸ் நச்சு!

“திமுக – அதிமுக என்னும் இருகட்சி அரசியலுக்குள் சிக்கிக் கொள்வதா? அவர்கள் இருவருக்கும் பெரிய வேறுபாடுகளில்லை. ஒருவர் நேரடி அடிமை – இன்னொருவர் மறைமுக அடிமை. திமுகவுக்கு இவ்வளவு ஆதரவு தேவையா? திமுகவுக்கு ஆதரவான அலை என்றெல்லாம் சொல்ல வேண்டுமா?” என்பன போன்ற சிலரின் கருத்து சரியா? இத்தகைய கருத்துகளுக்கான பதில்தான் இது… முதலில் இதை இரு கட்சி அரசியல் என்று புரிந்துகொள்வதனாலும், திமுகவுக்கு எதிராக இருப்பது அதிமுக என்பதாக புரிந்து கொண்டிருப்பதனாலும் எழும் குழப்பமே இது.…

என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்

என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல் அதிமுகவில் சலசலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், தற்போதைய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் சசிகலா விவகாரத்தில் சொன்ன கருத்துக்களும், அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னதும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பூங்குன்றன் சங்கரலிங்கம் சொன்னதும் சலசலப்புக்கும் அதிமுகவுக்கும் பஞ்சம் இல்லை என்றாகிவிட்டது. பொறுத்தம் போதும் என்று பொங்கல் தினத்தில்…

அமித்ஷா சென்னை வருகை ரத்து – அதிமுகவினர் மிரட்சி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி திடீரென்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டிருப்பது, அதிமுகவினரை மிரள வைத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவைச் சேர்ந்த தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருகை தருகின்றனர். கொரானா காரணமாக அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், அரசு விழாவில் பங்கேற்க நவம்பர் 23ஆம் தேதி சென்னை வந்தார் உள் துறை அமைச்சரும், பாஜகவின்…

முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்

இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று (டிசம்பர் 19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், “தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும்” என்ற தகவலைத் தெரிவித்தார். இந்த நிலையில் முருகனுக்கு அதிமுக தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முதல்வர் வேட்பாளர் குறித்த முருகனின் கருத்து சரியானதல்ல எனவும், முதல்வர் வேட்பாளரை…

வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று எதிரிகள் பல்வேறு யூகங்களை வகுத்து, சாதிவாரியாக வாக்குகளை சிதைக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய வியூகங்களை திமுக தலைவர் உணர்கிறாரா என்பது தெரியவே இல்லை. கூடுகிற கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என்பது கலைஞர் காலத்திலிருந்தே திமுகவினரின் அனுபவமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான மக்கள் மனநிலையை அப்படியே திமுகவுக்கு ஆதரவாக திருப்ப திமுக தலைவருக்கு குறுக்கே இருப்பது என்ன என்பது புரியாத புதிராகவே இரு்ககிறது.…

அதிமுகவின் பரிதாப நிலைக்கு அதிமுகவே காரணம்!

“பாஜகவின் முதன்மைக் குறி யார்?” என்று சமஸ் இந்து தமிழில் கட்டுரைஎழுதியிருக்கிறார். அதன் நோக்கம் அதிமுக வகிக்கும் இரண்டாம் இடத்தைப் பெறுவதுதான் என்று கணித்துள்ளார். “தேர்தலுக்குப்பின் அதிமுக நிச்சயம்இன்றைய பலத்தாடு நிற்க முடியாது. அப்போது அதிமுகவின் இடம் தனதாகும்என்று பாஜக இயங்குகிறது” என்கிறார். அது நடப்பது திராவிட இயக்க அரசியலுக்கு உகந்ததல்ல என்கிற தொனியும் அந்தக் கட்டுரையில் உள்ளது. அதிமுகவின் இடத்தை பாஜக கைப்பற்றுவது பற்றி சமஸ் கவலைப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இப்படியொரு நிலை உருவாகியிருப்பதற்கு அதிமுக…

பாஜக மந்தையின் மேய்ச்சல் நிலமாக தமிழகம் மாற ரஜினி பயன்படுவாரா?

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவர் அ.தி.மு.க, வலதுசாரி வாக்குகளைத்தான் பிரிப்பார். தி.மு.க.வுக்குப் பாதிப்பில்லை என்பது சிலரின் கருத்து. தர்க்கரீதியாக அது சரிதான். ஆனால் விஷயம் அத்துடன் முடிவதில்லை. தி.மு.க.வை வீழ்த்துவது மட்டுமல்ல பா.ஜ.க.வின் நோக்கம். தி.மு.க.வின் எதிரியான அ,தி.மு.க.வை வீழ்த்தி அந்த இடத்தில் தன்னை நிறுவிக்கொள்வது தான் பா.ஜ.க.வின் முதன்மையான நோக்கம். பா.ஜ.க.வால் இப்போதைக்குத் தி.மு.க.வை வீழ்த்த முடியாது. ஒருவேளை வரும் தேர்தலில் தி.மு.க தோற்றாலும் அது நிலைக்கும். தி.மு,க.வின் அமைப்புபலம் அதைக் காப்பாற்றும். மேலும் ‘அடுத்த…

உழைப்போர் கையில் பொறுப்பு – திமுக தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!

கடந்த திமுக பொதுக்குழுவில் தலைவர் ஸ்டாலின் 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்,இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன் அடிப்படையில் ஒன்றியங்களையும் மாவட்டங்களையும் பிரிக்கும்போது பழையவருடன் வேகமாக செயல்படும் புதியவர் ஒருவருக்கும் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் 30 ஊராட்சிகள் இருந்தாலும் 40 ஊராட்சிகள் இருந்தாலும் ஒன்றியத்தை இரணடாகப் பிரிப்பதுடன், பழைய ஆட்களுக்கே பெரும்பாலும் பொறுப்புகளும் கொடுக்கப்படுவதாக குறை எழுந்துள்ளது. அதாவது, 10…

“எது ஊழல் கட்சி? நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” – எடப்பாடி பழனிசாமிக்கு ஆ.ராசா MP சவால்

“அ.தி.மு.க ஊழல் கட்சியா அல்லது தி.மு.க ஊழல் கட்சியா என்பதை நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க முதல்வர் தயாரா?” என எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., சவால் விடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க ஊழல் கட்சி என விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும்வண்ணம் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் என்.ஆர்.இளங்கோ எம்.பி ஆகியோர் சற்றுமுன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க…

அரசியல் ஆடு புலி ஆட்டத்தில் அதிமுக-பாமக

“பாமக சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ளTNPSC அலுவலகம் முற்றுகை போராட்டத்துக்காக டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலையும், நவம்பர் 30ஆம் தேதி மாலையிலேயும் வட மாவட்டங்களில் இருந்து பாமகவினர் திரண்டு சென்னையை நோக்கி படையெடுத்தனர். அவர்களை முதல் நாள் இரவு ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீஸார் அந்தந்த பகுதிகளில் இருக்கும் திருமண மண்டபங்களில் தடுத்து வைத்தனர். டிசம்பர் 1ஆம் தேதி காலை சென்னையை நெருங்க முயற்சி செய்த நூற்றுக்கணக்கான பாமகவினர் பெருங்களத்தூர் முதல் தாம்பரம் வரை கடுமையான நெரிசலை ஏற்படுத்தினர்.…

அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!

திமுகவை இந்து விரோதிகள் என்றும் கடவுள் விரோதிகள் என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டுவதும், அதெல்லாம் இல்லை என்று அவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்க தங்கள் நேரத்தை திமுகவினர் செலவு செய்வதும் சமீபகாலமாக வாடிக்கையாகிவிட்டது. பாஜகவினரை திருப்திபடுத்த தங்கள் பக்தி வேஷத்தை போஸ்டர்களில் போட்டு நிரூபிக்க முயற்சி செய்யும் காமெடிகளையும் அவ்வப்போது திமுகவினரில் சிலர் நடத்துகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிய மாட்டேன் என்கிறது. திமுகவை இந்து விரோதி என்று சொல்லி பிரச்சாரம் செய்த கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான்…

1 2 3 4