Browsing: air india

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர். விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில்…

கேரளாவில் தரையிறங்கிய போது இரண்டாக உடைந்த விமானம் 19 பேர் உயிர் இழப்பு

வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில்துபாயிலிருந்து கேரளாவுக்கு 191 பேருடன் நேற்று இரவு வந்த ஏர் இந்தியா விமானம்விபத்துக்குள்ளானதில்,இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிக்கி இருப்பவர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் துபாயில் சிக்கித் தவித்தவர்களை அழைத்து வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயிலிருந்து ஏர் இந்தியா axb-1344 விமானத்தில்…

ஏர் இந்தியா அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா; டெல்லியில் உள்ள தலைமையகம் தற்காலிகமாக மூடல்

டெல்லியில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஏர் இந்தியா அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தலைமையகம் மூடப்பட்டது. தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் மொத்தம் 7639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 86 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து…