Browsing: America

மேலும் பின்னடைவைச் சந்திக்கும் டிரம்ப்

டெக்சாஸ் உட்பட 17 மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் டிரம்புக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபைடன் அமோக வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்து கோர்ட்டுகளில் டிரம்ப் தரப்பினர் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாநில…

ஏலியன்கள் அமெரிக்காகவோடு இணைந்து செயல்படுகிறது – இஸ்ரேல் விஞ்ஞானி

ஏலியன்கள் இருக்கிறதா, இல்லையா என்பது பல ஆண்டுகளாக நடக்கும் நீண்ட விவாதம். மறைந்த விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்கள் இருப்பதாக நம்புவதாகவும், மனித குலத்தின் இருப்பு அவற்றுக்குத் தெரிந்தால், அது நமக்கே ஆபத்தாக முடியும் எனவும் எச்சரித்திருந்தார். இந்தநிலையில், இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானி ஒருவர், ஏலியன்கள் இருப்பதாகவும், அவை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், மேலும் அவை கூட்டமைப்பு சேர்ந்து செயல்படுவதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இஸ்ரேல் நாட்டு விண்வெளி பாதுகாப்பு திட்டத்தின், தலைவராகக்…

2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்க டிரம்ப் திட்டம்

எதிர்வரும் 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டிரம்பை விட அதிகமான வாக்குகளை பெற்று பெரும்பாண்மை இடங்களில் வென்று ஜோ பைடன், அதிபராக தேர்வானார். ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். அமெரிக்காவின் 46வது அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி ஜோ பைடன் பதவியேற்கிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் கொண்டாட்டங்களை…

அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது- ப.சிதம்பரம் டுவீட்

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வெளியானதை அடுத்து அமெரிக்காவின் 46 வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பிடனுக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. விரைவில் இருவரும் பொறுப்பேற்கவுள்ளனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில்…

ஜோபைடன், கமலாஹாரீஸ் வெற்றி: அதிகாரபூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் கடந்த 5 நாட்களாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன ஆரம்பத்திலிருந்தே அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் முன்னணியில் இருந்த நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஜோபைடன் அவர்களுக்கு 284 கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

வெற்றி பாதையில் ஜோ பைடன்! அமெரிக்க தேர்தல்

அமெரிக்காவில் தேர்தல் முடிவுக்காக உலகமே காத்திருக்கிறது. நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் விறுவிறுப்போடு நடந்தது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள். தேர்தல் முடிந்த அடுத்த நாளே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதிபராவதற்கு மெஜாரிட்டியான 270 வாக்குகளை நோக்கி இருவரும் முன்னேறினர். ஆனால், ஜோ பைடன் 264 – ட்ரம்ப் 214 என்ற வாக்குகளோடு குழப்பம் நான்கு நாட்களாக நீடித்து வருகிறது.…

எனது வெற்றியை திருட முயற்சிக்கின்றார் ஜோபைடன்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார். அவர் விரைவில் வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக டிரம்ப் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தனது டுவிட்டரில் கூறிய…

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்க அதிபர் தேர்தல்வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ஷியாமலா கோபாலன் மற்றும் ஜமைக்காவைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியரான டொனால்ட் ஹாரிஸ் ஆகியோருக்குப் பிறந்த கமலா, அமெரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டில், அவர் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக ஆனார். இந்த பதவியை வகித்த முதல் வெள்ளையரல்லாத பெண் கமலாதான். 2016…

கொரோனாவை தடுக்க இந்தியாவிடம் உதவி கோரிய வல்லரசு நாடுகள்

டெல்லி: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி,  ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா ஆர்டர்  செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப் படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை…

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படலாம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2902 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்படி, வரும் 14ம் தேதி ஊரடங்கு நீடிக்கும். ஆனால், இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? அல்லது முழுமையாக நீக்கப்படுமா? அல்லது பகுதியா நீக்கப்படுமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துவருகின்றன.…

உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32, 205 ஆக உயர்வு !

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 752241 பேர் பாதிப்பட்டுள்ளனர். 36,207 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சுமார் 158688 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் 1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் மேலும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை 2757 ஆக உயர்வு. இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11500 ஆக அதிகரித்துள்ளது.