Browsing: anbumani

துரைமுருகன்-அன்புமணி ராமதாஸ் ரகசிய சந்திப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுக பாமக கூட்டணி அமைவதற்கான சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை பலன் பெறவில்லை. அப்போது திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் கொடுத்த ஒரு பேட்டியில், ‘எங்களோடு நெடுநாள் பழகியவர்கள் திடீரென வெளியேறலாம். எங்களை நேற்றுவரை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென எங்களோடு சேரலாம்; என்று கூறினார். இது பாமகவை மனதில் வைத்துதான் சொல்லப்பட்டது என்று அப்போதே பேச்சு கிளம்பியது. ஆனால்அப்போது அந்த கூட்டணி சாத்தியப்படவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல அல்லாமல் வரப்…

துரோகம் செய்யவே நாடாளுமன்றம் வந்த அன்புமணி

சென்னை: நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார் என்று திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில், சென்னையில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி பங்கேற்றார். அப்போது, அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மிக முக்கியமான ஈழ தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது. ஓட்டுரிமை தொடங்கி அவர்களின் வாழும் உரிமைகளைப் பறிக்க அதிமுக துணை போயிருக்கிறது. நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை. ஒருநாள் கூட அவர் அவைக்கு வந்தது இல்லை. தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவர் அவைக்கு வர மாட்டார். எப்போதும் அவர் தலைமறைவாக இருந்தார்.  ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்தார். சரியாக அன்று அவைக்கு வந்து, மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். வேண்டும் என்றே அன்புமணி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார். நாம் வாக்களித்து அனுப்பிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்து இருந்தால் இந்த சட்டம் அமலாகி இருக்காது. ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர். குடியுரிமை சட்ட திருத்தம், நாட்டில் அனைவரும் சமம் என்று சொல்வதற்கு எதிரானது. மக்களை இது மொத்தமாக பிரிக்கிறது. உலக நாடுகள் இதனால் இந்தியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது என்றார்.