Browsing: ancient

படிமம் என்பது என்ன?

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. அவற்றின் உடல் பகுதிகள், பாறைகள், மரத்துண்டுகளில் படிந்து கிடக்கின்றன. தொல்லியல் துறை நிபுணர்கள் இவற்றை கண்டுபிடித்து ஆய்வு செய்கின்றனர். இப்படி புதைந்து கிடப்பவற்றை படிமம் என்கிறார்கள். பூச்சிகள் அம்பர் என்ற கெட்டியான பொருளால் மூடப்பட்டிருக்கும். தாவரங்கள் காலப்போக்கில் கற்களாகவே மாறிவிடுகின்றன. சில விலங்குகளின் எலும்புகள் மண்ணுக்கு அடியில் கண்டெடுக்கப்படுகின்றன.

ஆதி மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது?

ஆதி மனிதனின் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடங்கியது. சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதன் உடல் முழுவதும் ரோமத்துடன், மனிதக் குரங்கைப் போன்ற முகத்துடன் இருந்தான். நேராக நிமிர்ந்து நடந்த அவன் குச்சிகள், கற்கள், எலும்புகள் ஆகியவற்றை கருவியாகப் பயன்படுத்தினான்.

டைனோசர்கள் நீளமான பெயர்களைப் பெற்றிருப்பது ஏன்?

டைனோசர்களின் பெயர்கள், நம்மை குழப்பும் வகையில் அமைந்துள்ளன. ஆனால், அந்தப் பெயர்கள் அதற்கு சொந்தமான டைனோசரின் சிறப்பு அம்சத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்தப் பெயர்கள், கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளி லிருந்து உருவாகியவை. டைனோசர் என்றால் கொடூரமான பல்லி என்று பொருள். கோரிதொசாரஸ் என்றால் தலைப்பாகையுடைய ஊர்வன என்று அர்த்தம். டிரைசெராடாப்ஸ் என்பதற்கு மூன்று கொம்புகளைக் கொண்ட முகம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆர்னிதோமிமஸ் என்பது பறவைகளை ஒத்திருப்பது என்பதாகும். பச்சிசெல்பாலோசைரிஸ் என்பதற்கு வலுவான தலை கொண்ட…