Browsing: andhra pradesh

விசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவு – உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு

இன்று காலை ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் விசாகப்பட்டினத்தில் விசவாயுக் கசிவு ஏற்பட்டது. அந்த விபத்தில் 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்தை வந்தடைந்த ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வாயுக்கசிவால் பாதிப்படைந்த மக்களை மருத்துவமனையில் வைத்து சந்தித்தார். மேலும், இந்த வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியினால் சுவாசம் பெற்றுக் கொண்டிருக்கும் மக்களுக்கு ரூ.…

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை: விஷவாயு கசிந்து 5 பேர் பலி

விசாகப்பட்டினம் அருகே கோபாலபட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ், ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாலர்கள் இன்று காலை ஆலையை திறக்க தயாராகிய நிலையில், அதிகாலை நேரத்தில் எரிவாயு கசியத் தொடங்கியது. மயக்கமடைந்த நூற்றுக்கணக்கான மக்களும் சுவாசிக்க கஷ்டப்படுபவர்களும், நகரில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கே.ஜி.ஹெச் மருத்துவமனையின் அதிகாரி, இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறினார்.…