Browsing: ANNA

மார்க்ஸ் படத்தை வைத்து அண்ணா தனது கடிதத்தில் சொன்ன கதை!

பூஜா மாடத்துப் படங்களை அருகே சென்று பார்த்தான் வாலிபன். திடுக்கிட்டுப்போய், கிழவியைக் கூப்பிட்டு, ஏசுவின் படத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி “இது என்ன?’’ என்று கேட்கிறான். இவரும் ஒரு அருளாளர்தான் என்கிறாள் கிழவி. “பெயர்?’’ – “தெரியாது’’. “எப்படிக் கிடைத்தது? யார் கொடுத்தது? – யாரும் கொடுக்கவில்லை – ஊரில் எங்கோ ஓரிடத்தில் இது விழுந்து கிடந்தது, பார்த்தேன்.’’ – “பார்த்து?’’ “இவர் ஒரு அருளாளர் என்று உணர்ந்தேன், எடுத்து வந்தேன்’’ “இவர்…

நேரு மறைவின் போது சிறையில் இருந்த அண்ணாவின் உணர்வுகள்!

நேரு மறைந்தபோது, அண்ணா சிறையில் இருந்தார். அவர் தனது சிறை டைரியில் எழுதிய குறிப்புகளில் நேருவை ஜனநாயக சீமான் மறைந்துவிட்டாரா என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார. 27-5-1964 இன்று பிற்பகல் 3 மணிக்குத் திடுக்கிடத்தக்க செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். இங்கு உள்ள கொடிமரத்தில் கொடி திடீரென பாதிக் கம்பத்துக்கு இறக்கப்பட்டது; விவரம் புரியாமல் கலக்கமடைந்தபடி, காவலாளிகளைக் கேட்டதற்கு, “நேரு காலமாகிவிட்டாராம்‘ என்று கூறினர். – நெஞ்சிலே சம்மட்டி அடி வீழ்ந்ததுபோலாகிவிட்டது. நம்ப முடியவில்லை; நினைக்கவே நடுக்கமெடுத்தது. காலை இதழிலேதான்,…

கிளிக்குப் பச்சை பூசுவதா? 2 – C.N.ANNADURAI

முறையுடன் தந்திடின் எத்துணை எழில் கிடைக்கிறது என்பதைத் தம்பி, இதோ இந்தப் பள்ளு எடுத்துக் காட்டுகிறது – பார். வானக் குரிசில் வள்ளலாய் – வரைக் கோனைப் பரிசு கொள்ளலாய் வழங்கு மாறும் புறப்பட்டே – புனல் முழங்கு மாறும் தலைப்பட்டே தானக் களிறு படிந்திடக் – கொலை ஏனக் களிறு மடிந்திடத் தழையின் ஆரம் உந்தியும் – பசும் கரையின் ஆரம் சிந்தியும் கானக் குளவி அலையவே – மது பானக் குளவி கலையவே முக்கூடற்பள்ளு…

கிளிக்குப் பச்சை பூசுவதா? 1 – C.N.ANNADURAI

தமிழின் ஓசை நயமும் பொருள் நயமும் – தமிழ் மொழியின் இனிமை. தம்பி, எங்கிருந்து வருகிறீர்? என்று கேட்டேன், நமது துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களை, சூலூரிலிருந்து வருகிறேன் என்றார் அவர். நான் வேடிக்கையாக அவரைக் கேட்டேன்; “அதென்னய்யா அப்படிச் சொல்கிறீர்? நீர் மட்டுந்தானா, சூலூரிலிருந்து வருகிறீர் – நாமெல்லோருமே சூலூரிலிருந்துதானே வந்திருக்கிறோம்” என்றேன் – கருவில் உருவாகி வந்த காதையல்லவா? அதனால் அவரும் உடனிருந்தோரும் சிரித்தனர். அது சரி, சூலூரிலிருந்து கிளம்புகிறோம், பிறகு நாம்…

திருச்சி மாநில மாநாடு – அன்பில் அழைக்கிறார் 2 – C.N.ANNADURAI

தம்பி, “நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து’’ நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது – இன்றைய ஏடுகள் கூறுவது என்ன? வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும்…

திருச்சியில் மாநில மாநாடு – அன்பில் அழைக்கிறார் 1 – C.N.ANNADURAI

தம்பி, மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள். அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத் தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்ப்பதுதான்! பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர், இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த பேச்சல்ல, “ஓஹோ’ என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையின ராகத் தலைவர்கள், பலர், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக்…

அத்தர் வியாபாரம் – C.N.ANNADURAI

தம்பி! லெனின் கிராட் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும், மதம் வேண்டும்! மதம் வேண்டும்! அற்புதமான இந்து மதம் எமக்கு வேண்டும்! என்று நெஞ்சு நெக்குருகக் கூறினர் – தெரியுமா உனக்கு! உனக்குத் தெரியுமா என்று கேட்கிறேனே, எனக்கே தெரியாது – இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறேன். லெனின் கிராட் – பெயரே இயல்பைக் கூறுவதாக இருக்கிறது – இலட்சியபுரி அது? மதமெனும் பேய்ப்பிடித்தாட்ட, செல்வவான்களின் செருக்கிலே சிக்கிச் சீரழிந்து, மூடத்தனத்தில் உழன்று கிடந்த மக்களை, ரஸ்புடீன் எனும்…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி., பெண்களுக்கு உரிய இடம் ஒதுக்க கி.வீரமணி அறிக்கை!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், ஒன்றிய சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகத்தின் பன்முகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் நியமனம் நடைபெறுவது அவசியம் என்று கூறியுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அளவில் அழுத்தம் கொடுத்து செயல்முறைக்குக் கொண்டுவர ஆவன செய்யுமாறு வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் *ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள முக்கிய அறிக்கை… ‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பது நீண்ட காலமாக அனைவரும் அறிந்த சொலவடையே! நமது நாட்டில் உள்ள உச்சநீதிமன்றத்தின்…

கனிமொழி கொரோனா வார்டுக்குள் நலம் விசாரித்தார்!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்தார் திமுக எம்பி கனிமொழி. அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் “எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று நலம் விசாரித்தார். சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார். அதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை…

1975 லேயே தமிழனுக்கு கம்யூட்டரை அறிமுகப்படுத்திய கலைஞர் – சாந்தி நாராயணன்

முதன் முதலில் அவர் ஒரு கணினியைக் கண்டபோது, அதன் செயல்பாடுகள் பலன்களை எல்லாம் கேட்டுவிட்டு அருகில் இருந்தவரிடம், “எல்லாம் செய்யும் என்று சொல்கிறாயே , இந்த கம்ப்யூட்டர் கவிதை எழுதுமாய்யா” என்று நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறார். கம்ப்யூட்டர் இன்னும் கவிதை எழுதிவிடவில்லை. ஆனால், கணினித்துறையில் தமிழர்கள் பல வெற்றிச் சரித்திரங்களை எழுதியிருக்கிறார்கள். அந்த வெற்றிக்கதைகளில் எல்லாம் கலைஞர் இருக்கிறார். ஆம், இன்றைக்கு மென்பொருள் துறையில் அமெரிக்கா முதல் உலகெங்கும் பணிபுரிந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு தமிழர்களின் வெற்றிக்குப் பின்னாலும் கலைஞர் இருக்கிறார்.…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 2 – உறைந்து நின்ற உருவம் – Govi.Lenin

கலைஞருக்கு தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டு, கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேரம். எப்போதும் போல அவர் உடல் நிலைப் பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. அலைபேசியில் பல நாட்களாக சேமித்துக் கிடந்த பல எண்களிலிருந்தும் அழைப்புகள். “இன்னைக்கு நைட்டு அறிவிச்சிடுவாங்களா?” ”அண்ணா சமாதி பக்கத்திலே இடம் ரெடியாகுதாமே” “ராஜாஜி ஹாலை க்ளீன் பண்ணி லைட்டு போடுறாங்களாமே?” -என ஆளாளுக்குத் தங்கள் ‘விருப்பங்களை’க் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலர் அரசியல் பண்பாட்டுடன் கோபாலபுரம்…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 1 – Govi.Lenin

அவர் எளியவர்களைக் குனிந்து பார்த்து அக்கறையுடன் கவனிக்கிறார். அவரைத் தமிழகம் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கிறது. முதல்வராகப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் நிறைவடையவில்லை. தேர்தல் களத்தில் பெற்ற வெற்றியைக் கொண்டாடக்கூட முடியவில்லை. நோய்த்தொற்று எனும் பேரிடர் காலத்தைப் போர்க்களத்திற்கான வியூகத்துடன் கையாள்கிறார். ஆட்சியின் தொடக்க நிலையில், கட்சி கடந்து அவரது செயல்பாடுகள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனைத் தக்க வைப்பதிலும் மேம்படுத்திக் கொள்வதிலும்தான் அவரது தொடர்ச்சியான வெற்றி உறுதி செய்யப்படும். தன்னை இந்த தமிழ்நாட்டு மக்களிடம் மெய்ப்பிப்பதற்கு அவருக்கு…

1 2 3