Browsing: ANNAVIN KADITHANGAL

ஒரு கால் விலங்கின் இசை..! – C.N.Annadurai

(அண்ணா தனது தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களில் இந்திய வரலாறு, உலக வரலாறு, உலகச் சிறுகதைகள் என கலந்து கொடுப்பார். அப்படி ஒரு கடிதத்தில் இடம்பெற்ற ரஷ்ய புரட்சிக் கதை இது…) ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. அவன் தகப்பனும், அண்ணன் தம்பிகளும் அதே பட்டறையில் வேலை செய்பவர்கள். தொழிற்சாலை முதலாளியுடையது. தொழிலாளர்களின் உரிமைக்காகக் கிளர்ச்சி செய்தான் என்பதற்காக, அந்த தொழிலாளியைச் சிறையிலே போட்டு அடைத்தார்கள். காலிலே, ஒரு விலங்கு; ஒரு இரும்புச் சங்கிலி. கதை, இந்த விலங்கைப்…

கிளிக்குப் பச்சை பூசுவதா? 2 – C.N.ANNADURAI

முறையுடன் தந்திடின் எத்துணை எழில் கிடைக்கிறது என்பதைத் தம்பி, இதோ இந்தப் பள்ளு எடுத்துக் காட்டுகிறது – பார். வானக் குரிசில் வள்ளலாய் – வரைக் கோனைப் பரிசு கொள்ளலாய் வழங்கு மாறும் புறப்பட்டே – புனல் முழங்கு மாறும் தலைப்பட்டே தானக் களிறு படிந்திடக் – கொலை ஏனக் களிறு மடிந்திடத் தழையின் ஆரம் உந்தியும் – பசும் கரையின் ஆரம் சிந்தியும் கானக் குளவி அலையவே – மது பானக் குளவி கலையவே முக்கூடற்பள்ளு…

கிளிக்குப் பச்சை பூசுவதா? 1 – C.N.ANNADURAI

தமிழின் ஓசை நயமும் பொருள் நயமும் – தமிழ் மொழியின் இனிமை. தம்பி, எங்கிருந்து வருகிறீர்? என்று கேட்டேன், நமது துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களை, சூலூரிலிருந்து வருகிறேன் என்றார் அவர். நான் வேடிக்கையாக அவரைக் கேட்டேன்; “அதென்னய்யா அப்படிச் சொல்கிறீர்? நீர் மட்டுந்தானா, சூலூரிலிருந்து வருகிறீர் – நாமெல்லோருமே சூலூரிலிருந்துதானே வந்திருக்கிறோம்” என்றேன் – கருவில் உருவாகி வந்த காதையல்லவா? அதனால் அவரும் உடனிருந்தோரும் சிரித்தனர். அது சரி, சூலூரிலிருந்து கிளம்புகிறோம், பிறகு நாம்…

திருச்சி மாநில மாநாடு – அன்பில் அழைக்கிறார் 2 – C.N.ANNADURAI

தம்பி, “நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து’’ நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது – இன்றைய ஏடுகள் கூறுவது என்ன? வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும்…

திருச்சியில் மாநில மாநாடு – அன்பில் அழைக்கிறார் 1 – C.N.ANNADURAI

தம்பி, மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள். அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத் தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்ப்பதுதான்! பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர், இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த பேச்சல்ல, “ஓஹோ’ என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையின ராகத் தலைவர்கள், பலர், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக்…

அத்தர் வியாபாரம் – C.N.ANNADURAI

தம்பி! லெனின் கிராட் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும், மதம் வேண்டும்! மதம் வேண்டும்! அற்புதமான இந்து மதம் எமக்கு வேண்டும்! என்று நெஞ்சு நெக்குருகக் கூறினர் – தெரியுமா உனக்கு! உனக்குத் தெரியுமா என்று கேட்கிறேனே, எனக்கே தெரியாது – இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறேன். லெனின் கிராட் – பெயரே இயல்பைக் கூறுவதாக இருக்கிறது – இலட்சியபுரி அது? மதமெனும் பேய்ப்பிடித்தாட்ட, செல்வவான்களின் செருக்கிலே சிக்கிச் சீரழிந்து, மூடத்தனத்தில் உழன்று கிடந்த மக்களை, ரஸ்புடீன் எனும்…