Browsing: arunan

அதிமுகவின் பரிதாப நிலைக்கு அதிமுகவே காரணம்!

“பாஜகவின் முதன்மைக் குறி யார்?” என்று சமஸ் இந்து தமிழில் கட்டுரைஎழுதியிருக்கிறார். அதன் நோக்கம் அதிமுக வகிக்கும் இரண்டாம் இடத்தைப் பெறுவதுதான் என்று கணித்துள்ளார். “தேர்தலுக்குப்பின் அதிமுக நிச்சயம்இன்றைய பலத்தாடு நிற்க முடியாது. அப்போது அதிமுகவின் இடம் தனதாகும்என்று பாஜக இயங்குகிறது” என்கிறார். அது நடப்பது திராவிட இயக்க அரசியலுக்கு உகந்ததல்ல என்கிற தொனியும் அந்தக் கட்டுரையில் உள்ளது. அதிமுகவின் இடத்தை பாஜக கைப்பற்றுவது பற்றி சமஸ் கவலைப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இப்படியொரு நிலை உருவாகியிருப்பதற்கு அதிமுக…

ரஜினி அண்ணனின் யாகமும் சாபமும்!

திராவிட இயக்கத்தை வீழ்த்தவே ரஜினி களம் இறக்கப்படுகிறார் என்பதற்கு தமிழருவிமணியன் கட்டுரை, எச் ராஜா பேச்சு, வானதி பேட்டி ஆகியவை உள்ளன. இப்போது ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவின் பேட்டியும் சேர்ந்து கொண்டுள்ளது. பெங்களூரில் உள்ள இவரிடம் சென்று ரஜினி ஆசிர்வாதம் வாங்கியது ஏதோ மூத்தவர் என்பதால் மட்டுமல்ல, அரசியல் சித்தாந்த ரீதியாக உடன் பயணிப்பவர் என்பதாலும் என்பது தெரிய வந்துள்ளது. திருவண்ணாமலையில் யாகம் நடத்திவிட்டு பேட்டி கொடுத்தவர் (தினத்தந்தி11-12-20) “ரஜினி அரசியலுக்கு வரவுள்ளதால் கூட யாகம் நடத்தப்பட்டதாக…

எங்கெல்ஸ்: பக்க வாத்தியமா? இரட்டை நாயனமா?

மார்க்சிற்கும் எங்கெல்சிற்கும் இடையே அறிவுப்புலத்தில் ஓர் அபாரமான வேலைப்பிரிவினை இருந்தது. முதலாளித்துவ உற்பத்தி முறைமையின் விதிமுறைகளையும், அவற்றின் உள்முரண்களையும் கண்டறிவதில் தனது ஆற்றலை செலவழித்தார். மார்க்ஸ் என்றால் முதலாளித்துவ சமூகத்தின் சித்தாந்த இயங்கு நிலையைக் கிளறிப்பார்ப்பதில் தனது திறமையைக் காட்டினார் எங்கெல்ஸ். ஒருவர் இன்னொருவரதுகளம் பற்றி ஆலோசனைகளையும் தந்து கொண்டார்கள். சமுதாயம் குறித்த ஒட்டுமொத்த பார்வை இருவருக்கும் பொதுவாக இருந்ததால் இது சாத்தியமானது. மூலதனம் நூல் மார்க்ஸ் எழுதியதே. ஆனால் அது எங்கெல்சின் பார்வைக்குப் பிறகே வெளியானது.…

எங்கெல்ஸ் அருணன் என்கிற நான்..! – ஏங்கெல்ஸ் பற்றிய தொடர் 1

கார்ல் மார்க்சை தெரிந்த அளவுக்கு பிரடெரிக் எங்கெல்சைத் தெரியாது பலருக்கும். வரும் நவம்பர் 28 அவரின் 200 ஆவது ஆண்டுதினம் என்பதும் தெரியாது. “மூக்குத்தி அம்மன்” புண்ணியத்தில் இவர் மார்க்சின் நண்பர் என்பது நாயகன் எங்கெல்ஸ் ராமசாமி மூலம் ஒரு புதிய பகுதியினருக்கு தெரிந்தது. தமிழ் சினிமாவில் மார்க்ஸ்படமெல்லாம் வந்திருக்கிறது. ஆனால் எங்கெல்ஸ் பெயர் கொண்ட ஒரு நாயகன்வந்ததாக நினைவு இல்லை. அப்படியொரு பெயரைக் கேட்க எனக்கும் உற்சாகம்தொற்றியது. காரணம் ஒருவிதத்தில் நான் எங்கெல்ஸ் அருணன்!சோவியத் ஒன்றியம்…