Browsing: athanurchozhan

காதல்! – ஆதனூர் சோழன் கவிதைகள்

இதத்தென்றல் என் தேகம் தழுவும் போது நிதமுன் நினைவென் உள்ளெரிக்கும். வெம்மையை மென்மை தழுவும்போது மயிர்க்கால் அடியில் கூச்சறியும். இரவுக்குள் அமிழும்போது உறவுக்குனை துணையழைக்கும் உன்உருவைக் கனவில்கண்டு உள்ளம்சற்று உயிர்பிழைக்கும். விழிகளை இமைகள் தாழிடும்போதும் இதயம் ஏனோ திறந்தபடி மலர்க்கள மமைத்து உன்னுடன்நான் மகரந்தக் கவிதை சுரந்தபடி. உன் சிறுநோவிலும் என்னுளம் நோகும் புன்சிரிப்பொன்றில் பூரணமாகும் கறுப்புச்சந்தன தோலின்மீது வாசம் நுகரும் வாழ்க்கை போதும்! -Athanur chozhan

சுஸ்ருதா – Indian scientists series – 1

ஒரு வெற்றிலைக் கொடியிலிருந்து இலையைப் பறித்தார். அதைக் கொண்டு வழிப்போக்கனின் மூக்கை அளவெடுத்தார். பின்னர், சுவரில் இருந்த கத்தியை எடுத்து தீயில் சிறிது நேரம் வாட்டினார்.
அந்தக் கத்தியால் வழிப்போக்கனின் கன்னத்தில் இருந்து சிறிதளவு தசையை வெட்டி எடுத்தார். அவன் முனகினான்.

மதிகெட்ட நாயும், பன்றியோடு சேர்ந்த தந்தியும்!

2004ஆம் ஆண்டு நான் சென்னை தினமணியில் சேர்ந்தப்போ, பொறுப்பாசிரியரா எம்.சந்திரசேகரனும், தலையங்க பக்க ஆசிரியரா ராயப்பாவும் இருந்தாங்க. அப்போவெல்லாம் தினமணி கார்ட்டூன்கள் பிரச்சனைகள் தொடர்பாகத்தான் இருக்கும். தனி மனித தாக்குதல்களை ஆசிரியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். துக்ளக் சோ குருமூர்த்தியிடம் சொல்லி, குருமூர்த்தி தினமணி ஓனர்கிட்ட சொல்லி தினமணியில் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்தவன் இந்த மதி. சம்பந்தம் ஆசிரியரா இருந்தப்போ உள்ளே வந்தவன், திமுகவை விமர்சனம் செய்றதுன்னா ரொம்ப ஆர்வமா இருப்பான். அப்படி அவன் போட்ட கார்ட்டூன் எதையாச்சும் முரசொலியில்…

நோய்கள் பரப்பியதாக இந்துக்களை விரட்டிய அமெரிக்கர்கள் – வரலாறு சொல்லும் பாடம்!

இஸ்லாமியர்கள் கொரோனா நோயைப் பரப்புவதாக இந்துமத வெறியர்கள் இப்போது செய்திகளை பரப்புகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் இதே செய்தித்தாள்களும், அறிவுஜீவிகளும் இணைந்து இதேபோல நஞ்சுகலந்த பொய்ச் செய்திகளை பரப்பினார்கள். ஆக, நீண்டகாலமாகவே, இத்தகைய இனவெறி, மற்றும் மதவெறி விஷம் கலந்த பொய்ச் செய்திகள் அரசியலின் முக்கிய அம்சமாக தொடர்கிறது என்பதை ஆதாரபூர்வமாக இந்தக் கட்டுரை அலசுகிறது. இன்றைக்கு கொரோனா தொற்று நோயை குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் பரப்பிவிடுவதாக தொடர்ந்து பொய்ச் செய்திகள் பரப்பிவிடப்படுகின்றன. இந்தக் காலத்தில் நடப்பதைப்…