Browsing: Beela rajesh

சென்னை ஸ்டான்லி மருத்துமவமனையில் கொரோனா சோதனை கியாஸ்க் – அசத்தும் சுகாதாரத்துறை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருபவர்களை சோதனை செய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கியாஸ்க் செயல்பாட்டினை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா சோதனையை எளிதாகவும் அதேசமயம் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள தனிநபர் பாதுகாப்பு உபகரணம் (PPE) தேவைப்படாத கியாஸ்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கியாஸ்க் முழுவதும் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைக்குப்பிறகும், கையுறைகள், சானிடைசரின் உதவியுடன்…

தமிழகத்தில் இன்று மட்டும் 48 கொரோனா பாசிட்டிவ்

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் அறிவித்து வரும் நிலையில் சற்று முன் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தெரிவித்துள்ளார் இதன்படி தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 48 பேர்களில் 42 பேர் டெல்லி மாநாட்டில்…

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்வு: பீலா ராஜேஷ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 57 வயது பெண் சென்னையில் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் திருச்சி சென்று வந்தவர். சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயில் மூலம் சென்று வந்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடைப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.

திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு: பீலா ராஜேஷ்

திருச்சி: திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை முன் கூட்டியே தினகரன் நாளிதழில் தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்துள்ளார்.

பிரதமர் மோடி காணொளி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோன தடுப்பு பணிகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனையில் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளை…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரிப்பு….பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருந்து வந்தவர்கள் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக…