Browsing: bharathiraja

‘புதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை’

VPF கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிவித்துள்ள அவர், ‘ திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விபிஎஃப் கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்னையில் சுமுக முடிவு எடுக்கப்படும் வரை புதிய படங்கள் வெளியாகாது . டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும்.…

தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி!” – பாரதிராஜா

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்… “தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் இருமல் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000. அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு. இந்திய அரசின் உயரிய விரு துகளான பத்மஸ்,ரீ பத்மபூஷன் போன்ற விருதுகளை…

சூர்யா அறிக்கைக்கு பாரதிராஜா பாராட்டு

பிரபல நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்தது குறித்தும் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார் என்பதை பார்த்தோம். இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதனை சூர்யா ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் அறிக்கைக்கு எதிராக கண்டன கருத்துக்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சூர்யாவின் அறிக்கைக்கு பல திரையுலக பிரபலங்கள் பாராட்டு…

சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை

ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்குவருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது அதில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிடத் தேவையில்லை. மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒரு வரை ஒருவர் குற்றம் சாற்றிக் கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம். எல்லாவற்றிக்கும் நாம் தான் காரணம்.…

பாரதிராஜா வேண்டுகோளை வழிமொழிந்த சிலம்பரசன்

திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணிப்…

சுதந்திர தினத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அறிவிப்பு வெளியிட முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

தமிழ்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் பாரதிராஜா வெளியிட்டிருக்கும் அறிக்கை மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம். ஆனால் பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி… படப்பிடிப்புகளையும் நிறுத்தி, நூற்றைம்பது நாட்கள் ஆகிறது என்ற வேதனையை தமிழ்சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும்…

நடிகை மீராமிதுன் அவதூறுக்கு பாரதிராஜா கண்டனம்

சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ் சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன். ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை… ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா…

புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமலஹாசன் ஆதரவு

தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கென்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளன. நான்காவதாக இப்போது, தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவராக இயக்குநர் பாரதிராஜா பொறுப்பேற்றிருக்கிறார். இதற்கு கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், புதிய சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இது சம்பந்தமாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள பதிவில்…. முடக்கத்தையுடைத்து முயற்சியெடுக்கையில் முன்னேர்…

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தாணுவுக்கு சிங்காரவேலன் பதிலடி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு செப்டம்பர் மாதம்தேர்தல் நடப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய சங்கம் ஒன்று உருவாகி உள்ளது. இந்தச் சங்கத்துக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர்.அச்சங்கத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடந்துவருகிறது. அச்சங்கத்துக்கு நடிகர் கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில்,கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் செய்தியாளர்களைச்…

பாரதிராஜா புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்குவதாக அறிவிப்பு

தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன.இதுதொடர்பாக ஆகஸ்ட் 2 அன்றுபாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது என்று சொல்லியிருந்தார். தற்போதுள்ள…

இளையராஜா காவல் ஆணையரிடம் புகார்

சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா காவல்துறையில் புகார் செய்து உள்ளார்.இளையராஜா தொடக்க காலம் முதல் பிரசாத் ஸ்டியோவில்  தான் இசையமைப்பாளராக பணிபுரியும்படங்களுக்கு இசை அமைத்துவந்தார் பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளரான எல்.வி. பிரசாத் இளையராஜாவுக்காக பிரத்யேக வசதிகள் செய்துகொடுத்து இருந்தார்எல்.வி. பிரசாத் காலத்துக்குப் பிறகு அவரது மகன் காலத்திலும் இது தொடர, இப்போது அவரது பேரன்  பிரசாத் ஸ்டுடியோவின் உள் கட்டமைப்பை மாற்றியமைக்க முடிவு செய்து இளையராஜாவை காலி…

பாரதிராஜா தலைமையில் படத் தயாரிப்பாளர்களுக்கு புதிய சங்கம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது 4500 உறுப்பினர்கள் இருக்கும் இந்த சங்கத்தில் 1300 தயாரிப்பாளர்கள் வாக்குரிமை உள்ளவர்களாக உள்ளனர்சங்கத்திற்குகடந்த முறை நடைபெற்ற தேர்தலில்நடிகர் விஷால் தலைவராக வெற்றிபெற்றார் அவர் தலைமையிலான நிர்வாக குழு இரண்டு ஆண்டுகள் முழுமையான பதவி காலத்தில் ஆக்கபூர்வமான பல்வேறு முயற்சிகளை தயாரிப்பாளர்கள் நலனுக்காக மேற்கொண்டது அந்த முயற்சிகள் எதையும் அமுல்படுத்தவிடாமல் விஷாலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவது,…