Browsing: bus

சென்னையில் இருந்து அரசு பேரூந்துகளில் பயணப்பட்ட 7000ம் பயணிகள்

ஐந்துமாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று பேருந்து சேவை தொடங்கிய நிலையில் சென்னையிலிருந்து மட்டும் தென் மாவட்டங்களுக்கு 7,000 பேர் பயணம் செய்துள்ளதாகப் போக்குவரத்து வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரானா பாதிப்பு காரணமாகக் கடந்த 5 மாதங்களாகப் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை நேற்று தொடங்கியது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் பிற…

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது! – அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ள நிலையில் பேருந்து கட்டணம் உயர இருப்பதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. எனினும் குறைவான மக்களே பேருந்துகளில் பயணித்து வரும் நிலையில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் “தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்தியில்…

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. தனிநபர் இடைவெளிக்காக ஒரு பேருந்தில் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை

காவிய நாயகன்! பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை. நெடுந்தூரப் பயணங்களில் தூங்கித்தான் பொழுதைக் கழித்தாகவேண்டும். அலுவலகத்துக்குக் கிளம்பும் குட்டிப் பயணங்களில் சற்று அசந்தால், இறங்கவேண்டிய நிறுத்தம் தவறிவிடுமென்பதால் பெரும்பாலும் தூங்குவதில்லை. அதையும் மீறி தூக்கம் நம்மை அசைத்துப்பார்த்த தருணங்களும் உண்டு. பேருந்தில் தூங்கும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கும்பகர்ணனை சமீபத்தில்தான் பார்த்தேன். கோயம்பேட்டிலிருந்து ஆவடி செல்லும் பேருந்து. நெடுநெடுவென உயரம். ஆகப் பருமனான சோடாபுட்டிக் கண்ணாடி, காதில் ஹெட்போன். முன்னிருக்கையில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.…