Browsing: c.n.annadurai

ஒரு கால் விலங்கின் இசை..! – C.N.Annadurai

(அண்ணா தனது தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களில் இந்திய வரலாறு, உலக வரலாறு, உலகச் சிறுகதைகள் என கலந்து கொடுப்பார். அப்படி ஒரு கடிதத்தில் இடம்பெற்ற ரஷ்ய புரட்சிக் கதை இது…) ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. அவன் தகப்பனும், அண்ணன் தம்பிகளும் அதே பட்டறையில் வேலை செய்பவர்கள். தொழிற்சாலை முதலாளியுடையது. தொழிலாளர்களின் உரிமைக்காகக் கிளர்ச்சி செய்தான் என்பதற்காக, அந்த தொழிலாளியைச் சிறையிலே போட்டு அடைத்தார்கள். காலிலே, ஒரு விலங்கு; ஒரு இரும்புச் சங்கிலி. கதை, இந்த விலங்கைப்…

மார்க்ஸ் படத்தை வைத்து அண்ணா தனது கடிதத்தில் சொன்ன கதை!

பூஜா மாடத்துப் படங்களை அருகே சென்று பார்த்தான் வாலிபன். திடுக்கிட்டுப்போய், கிழவியைக் கூப்பிட்டு, ஏசுவின் படத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி “இது என்ன?’’ என்று கேட்கிறான். இவரும் ஒரு அருளாளர்தான் என்கிறாள் கிழவி. “பெயர்?’’ – “தெரியாது’’. “எப்படிக் கிடைத்தது? யார் கொடுத்தது? – யாரும் கொடுக்கவில்லை – ஊரில் எங்கோ ஓரிடத்தில் இது விழுந்து கிடந்தது, பார்த்தேன்.’’ – “பார்த்து?’’ “இவர் ஒரு அருளாளர் என்று உணர்ந்தேன், எடுத்து வந்தேன்’’ “இவர்…

நேரு மறைவின் போது சிறையில் இருந்த அண்ணாவின் உணர்வுகள்!

நேரு மறைந்தபோது, அண்ணா சிறையில் இருந்தார். அவர் தனது சிறை டைரியில் எழுதிய குறிப்புகளில் நேருவை ஜனநாயக சீமான் மறைந்துவிட்டாரா என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார. 27-5-1964 இன்று பிற்பகல் 3 மணிக்குத் திடுக்கிடத்தக்க செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். இங்கு உள்ள கொடிமரத்தில் கொடி திடீரென பாதிக் கம்பத்துக்கு இறக்கப்பட்டது; விவரம் புரியாமல் கலக்கமடைந்தபடி, காவலாளிகளைக் கேட்டதற்கு, “நேரு காலமாகிவிட்டாராம்‘ என்று கூறினர். – நெஞ்சிலே சம்மட்டி அடி வீழ்ந்ததுபோலாகிவிட்டது. நம்ப முடியவில்லை; நினைக்கவே நடுக்கமெடுத்தது. காலை இதழிலேதான்,…

கிளிக்குப் பச்சை பூசுவதா? 2 – C.N.ANNADURAI

முறையுடன் தந்திடின் எத்துணை எழில் கிடைக்கிறது என்பதைத் தம்பி, இதோ இந்தப் பள்ளு எடுத்துக் காட்டுகிறது – பார். வானக் குரிசில் வள்ளலாய் – வரைக் கோனைப் பரிசு கொள்ளலாய் வழங்கு மாறும் புறப்பட்டே – புனல் முழங்கு மாறும் தலைப்பட்டே தானக் களிறு படிந்திடக் – கொலை ஏனக் களிறு மடிந்திடத் தழையின் ஆரம் உந்தியும் – பசும் கரையின் ஆரம் சிந்தியும் கானக் குளவி அலையவே – மது பானக் குளவி கலையவே முக்கூடற்பள்ளு…

கிளிக்குப் பச்சை பூசுவதா? 1 – C.N.ANNADURAI

தமிழின் ஓசை நயமும் பொருள் நயமும் – தமிழ் மொழியின் இனிமை. தம்பி, எங்கிருந்து வருகிறீர்? என்று கேட்டேன், நமது துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களை, சூலூரிலிருந்து வருகிறேன் என்றார் அவர். நான் வேடிக்கையாக அவரைக் கேட்டேன்; “அதென்னய்யா அப்படிச் சொல்கிறீர்? நீர் மட்டுந்தானா, சூலூரிலிருந்து வருகிறீர் – நாமெல்லோருமே சூலூரிலிருந்துதானே வந்திருக்கிறோம்” என்றேன் – கருவில் உருவாகி வந்த காதையல்லவா? அதனால் அவரும் உடனிருந்தோரும் சிரித்தனர். அது சரி, சூலூரிலிருந்து கிளம்புகிறோம், பிறகு நாம்…

திருச்சி மாநில மாநாடு – அன்பில் அழைக்கிறார் 2 – C.N.ANNADURAI

தம்பி, “நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து’’ நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது – இன்றைய ஏடுகள் கூறுவது என்ன? வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும்…

திருச்சியில் மாநில மாநாடு – அன்பில் அழைக்கிறார் 1 – C.N.ANNADURAI

தம்பி, மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள். அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத் தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்ப்பதுதான்! பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர், இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த பேச்சல்ல, “ஓஹோ’ என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையின ராகத் தலைவர்கள், பலர், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக்…

அத்தர் வியாபாரம் – C.N.ANNADURAI

தம்பி! லெனின் கிராட் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும், மதம் வேண்டும்! மதம் வேண்டும்! அற்புதமான இந்து மதம் எமக்கு வேண்டும்! என்று நெஞ்சு நெக்குருகக் கூறினர் – தெரியுமா உனக்கு! உனக்குத் தெரியுமா என்று கேட்கிறேனே, எனக்கே தெரியாது – இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறேன். லெனின் கிராட் – பெயரே இயல்பைக் கூறுவதாக இருக்கிறது – இலட்சியபுரி அது? மதமெனும் பேய்ப்பிடித்தாட்ட, செல்வவான்களின் செருக்கிலே சிக்கிச் சீரழிந்து, மூடத்தனத்தில் உழன்று கிடந்த மக்களை, ரஸ்புடீன் எனும்…

“தி.மு.க. கரை வேட்டியை உருவாக்கிய அண்ணாவின் தம்பி”

பி.ஏ.சாமிநாதன் என்ற பெயர் சாதாரணமானதல்ல. மிகப்பெரும் ஆளுமைக்குச் சொந்தக்காரர். அந்தக் காலத்தில் ஒன்றுபட்ட கோவை மாவட்ட தி.மு.க.செயலாளர். இன்றைக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு என நான்கு வருவாய் மாவட்டங்கள்.கழக நிர்வாகத்தில் 13 மாவட்ட கழக நிர்வாகம் இவை அனைத்தும் ஒரே ஒரு நபராக இருந்து பணியாற்றியவர். கழக கொடியின் நிறமான கருப்பு சிவப்பு கலரில் வேட்டியில் கரையாக போட்டு கட்டலாம் என்ற சிந்தனையைக் கொண்டு தன்னுடன் இருந்த கழகத் தோழர் திரு. பு.கா.ஆறுமுகம் அவர்களுடன் இணைந்து…

அற்புதங்களின் குவியல் அண்ணா!

தேசியம் என்பதே புரட்டு. அது காலிகளின் புகலிடம் என்று தந்தை பெரியார் சொன்னார். இன்றைக்கு இந்திய தேசியவெறியை தூண்டிவிடும் காவிகளின் கூடாரம் பெரியார் சொன்னது உண்மை என்பதை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது. எல்லாவற்றையும் ஒற்றைமயமாக்கல் என்பதே தேசியத்தின் உள்ளடக்கம் என்பதை சமீபத்திய பாஜக ஆட்சி தெளிவாக உணர்த்தி வருகிறது. பல்வேறு இனக்குழுக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு உணவுப்பழக்கங்கள் என்று வேறுபட்ட மக்கள் அடங்கிய இந்திய தேசியத்தை நோக்கி அண்ணா ஏராளமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்திய…