Browsing: campfire

இரவெல்லாம்

5 இரவெல்லாம் ஊர்சுற்றிவிட்டு வீடு திரும்பியிருக்கிறது பூனை இந்த நிலவுமட்டும் வாய்பேசுமென்றால் எங்கே போனாய் என்ற கேள்விக்கு பூனை சொன்ன மியாவை மொழிபெயர்த்துவிடலாம்! 6 தன் வீட்டு வாசலோரத்தை இந்த கூறுகெட்ட பூனை பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதாக அலுத்துக்கொள்கிறார் அவர் ஒருமுறையாவது அந்தப் பூனைக்கு பாடம் கற்றுத்தந்துவிடவேண்டுமென்று அவர் கையில் வைத்திருக்கும் பிரம்பைப் பார்த்த தினம் சிறுநீர்கூட வரவில்லை எனக்கு இரண்டொரு முறை அவர் கற்றுத் தரமுயன்ற பாடத்திலிருந்து லாவகமாக பூனை நழுவியதை கண்ணாரக் கண்டேன் இந்த…