Browsing: CBSE

சிபிஎஸ்இ தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படாது- அதிகாரி தகவல்

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டன. எனவே, மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வியும், அது எழுத்துத்தேர்வாக நடத்தப்படுமா அல்லது ஆன்லைன் வழியாக நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தன. இது குறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிபிஎஸ்இ தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படாது என்றும் எழுத்துத் தேர்வாகத்தான் நடத்தப்படும் எனவும்…

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்: மத்திய அரசு

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி, மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி, ஒரு விருப்ப மொழியாக இருக்கும். சமஸ்கிருதம் மட்டுமல்லாமல், இதர தொன்மை வாய்ந்த மொழிகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியீடு

சிபிஎஸ்இ 10 ,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் 15 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வுகள் நடைபெறும் போதே, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். வீடுகளில் இருந்தவாறு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.