Browsing: central government

வேளாண் சீர்திருத்த சட்டங்கள் – பிரதமர் மோடி விளக்கம்

இந்தியாவில் வேளாண் சீர்திருத்த சட்டங்கள் விவசாய துறையில் ஈடுபடும் மக்களின் வருமானத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு விவசாய சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வித சட்டங்கள் எல்லாம் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு, இடையுறாக இருப்பதுடன் பெரு நிறுவனங்களின்…

வீட்டிலிருந்தே வேலை செய்யும் அரசின் அதிரடித் திட்டம்

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று வீதம் கட்டுக்குள் வந்துள்ளது என்றாலும், அது தொடர்வதையும், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைகள் மீண்டும் ஒரு கொரோனா தொற்று பரவலை உருவாக்கிவிடக்கூடாது என்பதையும் தான் உறுதி செய்ய விரும்புவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களுக்கு பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் எப்படி இயங்கவேண்டும் என்பது தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அத்துடன், வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை கட்டாயமாக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்பு அவர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை கட்டாயமாக்க எடுத்த…

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தரவின் படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பல்வேறு நடவடிக்கைகள் கொரோனாவுக்கு பொருத்தமான நடத்தை மற்றும் எச்சரிக்கையுடன் செயல்படுதல் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை கண்டிப்பாக அமல்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட…

அரியர் மாணவர்கள் தேர்ச்சி மத்திய மாநில அரசுகள் பதில்தா நீதிமன்றம் உத்தரவு

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரியர் தேர்வு ரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதற்கு அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் ஏஐசிடிஇ தலைவர் இருவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் அரியர் தேர்வு விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து வருகிறார்.…

மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

இந்திய எல்லைப்பகுதியில் சீன ஆக்கிரமிப்பின் உண்மைகளைக் கூறுவதன் மூலம் பிரதமர் மோடி சத்தியாகிரஹம் இருப்பாரா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதினம் வருவதையொட்டி, ‘குப்பைகள் இல்லா தேசம்’(garbage-free India)எனும் ஒருவார இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மக்கள் அனைவரும் குப்பைகள் இல்லா இந்தியா உருவாக உறுதி மொழி ஏற்றுச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதுதொடர்பாக பிரமதர் அலுவலகமும் “கார்பேஜ் குவிட் இந்தியா”…

புதிய கல்வி கொள்கைதமிழக கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்சி -தங்கம் தென்னரசு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை பற்றி முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை திராவிட ஆட்சியில் தமிழகத்தை பொறுத்தவரை கல்வித்துறையில், முன்னேறிய கல்வி கட்டமைப்பு உருவானது. இந்த கட்டமைப்பை முழுமையாக சீர்குலைக்க நடக்கும் முயற்சியே புதிய கல்விக்கொள்கையாகும். இதனால் தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை விகிதம் பெருமளவு குறையும். இடைநிற்றல் அதிகரிக்கும். காமராஜர் முதல்வராக இருந்த காலத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி காலம் வரை, பட்டிதொட்டியெங்கும் உருவாக்கப்பட்ட தொடக்கப்பள்ளியை இழுத்து…

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக விமான போக்குவரத்து மற்றும் ரயில், பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மே மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரயில் சேவை போன்று விமான சேவையும் தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக…

ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு

ஊரடங்கு முடிந்து ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் திறக்கப்படும் சூழலில், அவை பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் ஆகியவை மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜூன் 8 முதல் மால்கள், ஹோட்டல்கள் இயங்க ஆரம்பித்தபின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.…

கிஸான் கடன் அட்டை (கேசிசி) வைத்துள்ள மற்றும் பிரதம மந்திரி கிஸான் (PM-KISAN) பயனாளி விவசாயிகளுக்காக பெரிய நிவாரண நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.

கோவிட்-19 க்கு மத்தியில் கிஸான் கடன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கிஸான் கடன் அட்டை (கேசிசி) வைத்துள்ள மற்றும் பிரதம மந்திரி கிஸான் (PM-KISAN) பயனாளி விவசாயிகளுக்காக பெரிய நிவாரண நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. உலகளாவிய தொற்றான கோவிட்-19 பரவுவதை தடுப்பதற்காக நாடுதழுவிய ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக விவசாயிகள் விவசாயம், அவர்களது அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் தொடர்ந்து பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர். எனினும் இந்த நெருக்கடி காலத்தில்…

பாதிப்பில் தமிழகம் 3-வது இடம்: கடந்த 24 மணிநேரத்தில் 10 மாநிலங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை…மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், பின்னர் 19 நாட்கள், அடுத்தது 14 நாட்கள் என 3 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தவும் மத்திய…

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் இனிவரும் காலங்களில் அடிக்கடி பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது. மத்திய அரசின் புதிய விதிகள் செயல்பாட்டுக்கு வந்தால், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலேயே கர்நாடகம் மேகதாது அணையையும், கேரளம் முல்லைப்…