Browsing: cheif minister

விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் முதல்வர் எடப்பாடி- மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டத்தை ஆதரித்ததற்காக விவசாயிகளிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்றுமாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேறியதாக அறிவித்தார் துணைத் தலைவர் ஹரிவன்ஸ். முன்னதாக  இந்தச் சட்டத்தை ஆதரித்து நீீீீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதில், தமிழக விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் வகையில் வேளாண்திட்டங்கள் உள்ளன.…

தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் – முதலமைச்சர் கே. பழனிசாமி

தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கை குறித்து விரிவாக கூறியுள்ளார். தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இந்த உணர்வை பல கட்டங்களில் போராட்டங்கள் மூலமாகத் தெரிவித்துள்ளனர். 1965ஆம்…

அதிமுக தலைமை புதிய பட்டியலை எதிர்பார்க்கும் தொண்டர்கள்

அதிமுக நிர்வாகிகளின் மாற்றப் பட்டியல் கடந்த ஜூலை 25ஆம் தேதி வெளிவந்தது. இதன்படி மொத்தம் 31 மாவட்ட அமைப்புகளுக்கான செயலாளர்களும், பல்வேறு துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகளும், அமைப்புச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே ஒரே மாவட்டமாக இருந்த அமைப்புகளை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டங்கள், புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் ஒன்றியங்களையும் பிரித்து புதிய ஒன்றியச் செயலாளர்களையும் மிக வேகமாக நியமித்து வருகிறது அதிமுகதலைமை. முதலில் வெளிவந்த பட்டியலில் முதல்வரின் சேலம் மாவட்டம், துணை…

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது – முதல்வர் பழனிசாமி

ஈரோடு : கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது, இதனை அவர் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பகுதியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் சிறுமியை கடத்த முயன்ற வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், கொரோனா காலத்திலும்…

மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய முதல்வருக்கு கோரிக்கை

மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் முறைப்படுத்தி வழங்க முதலமைச்சருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைனில் வழங்க நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவு – உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு

இன்று காலை ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் விசாகப்பட்டினத்தில் விசவாயுக் கசிவு ஏற்பட்டது. அந்த விபத்தில் 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்தை வந்தடைந்த ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வாயுக்கசிவால் பாதிப்படைந்த மக்களை மருத்துவமனையில் வைத்து சந்தித்தார். மேலும், இந்த வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியினால் சுவாசம் பெற்றுக் கொண்டிருக்கும் மக்களுக்கு ரூ.…