Browsing: cheifminister

புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

புதிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வேண்டுகோளை அடுத்து இதற்கான பணிகளை அரசு செய்து வந்தது. இந்த நிலையில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணியில் தமிழக அரசு தற்போது தீவிரம் காட்டியுள்ளது. முன்னால் முதல்வர் ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. போயஸ் கார்டன்…