Browsing: Chennai High Court

அவசர பயண விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் அனுமதி; ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வெளியூர் செல்பவர்களுக்கு மட்டும் மின்னணு முறையில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல் நலக் குறைவுகளுக்கு உடனடி அனுமதிச்சீட்டு வழங்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால மக்கள் பாதிக்கப்படுவதாக மனுவில்…

தமிழகத்தில் மதவழிபாட்டு தலங்கள் திறப்பு எப்போது? – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில்,…