Browsing: cinema news

அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி

தியேட்டர்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்களை, வரும் 15ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அதில், தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு ஒருவர் அமர வேண்டும். 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம், அனைவரும் மாஸ்க் அணிந்த படியே படம் பார்க்க வேண்டும். படம் முடித்த பிறகு ஒவ்வொரு முறையும் தியேட்டர்களை…

நண்பர்கள் தினத்துக்காக சிம்பு பாடிய பாடல் – இணையத்தில் வெளியானது

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு என் நண்பனே எனத் தொடங்கும் பாடலை தயாரித்து பாடியுள்ளார். நடிகர் சிம்புவுக்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய நண்பர் முகாம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டிலேயே எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குபவர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல்நாள் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து அவர் அந்நாளைக் கொண்டாடும் விதமாக என் நண்பனே என்ற பாடலை தயாரித்து பாடி விரைவில் வெளியிட உள்ளார். தற்போது இணையத்தில் இந்த பாடலின் ப்ரோமோ…

திரையரங்குகள் திறப்பு அறிவிப்பு பங்குசந்தையில் பண புழக்கம் நீடிக்குமா?

கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசம் தழுவிய ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் மார்ச் 18ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கின்றன. முழுதாக நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்டு 1 முதலான அடுத்த ஊரடங்குத் தளர்விலாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா என்று திரையரங்குதரப்பில்எதிர்பார்த்திருக்கிறார்கள். என்னதான் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் என்று செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் வீட்டு TVயில் சினிமா பார்த்தாலும் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்க்கும் அனுபவத்தை இந்தத் தொழில் நுட்பங்கள் ஈடுகட்டப் போவதில்லை. இந்த நிலையில் மக்கள் மத்தியில்…

கனமான விலைக்கு வியாபாரம் ஆன களத்தில் சந்திப்போம்

தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள், நடிகைகள். இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் 90 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் களத்தில் சந்திப்போம். ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் இதுகதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காரைக்குடி செட்டியாராக ” அப்பச்சி ” என்ற…

கேள்விஞானத்தில் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக பாடுபவர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலட்சுமி இருந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாடகி வைக்கம் விஜய லட்சுமி தற்போது ‘கால் டாக்ஸி’ படத்தில் இடம் பெறும் ‘கிக்கு செம்ம கிக்கு…’ என்ற பாடலை பாடியுள்ளார். குத்துப்பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலை…

இணையத்தில் ரிலீஸ் ஆகும். ஹவாலா

நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு.  அவர்கள் தாதாக்கள் ஆனார்களா? காதலர்களாக வாழ்ந்தார்களா? என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி வரும் படம்தான்  “ஹவாலா”. இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாகவும் நடிக்க , அமுல்யா சஹானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும், இதில் நிழல்கள் ரவி சூரியோதயா, சீனிவாஸ் வசிஷ்டா, பிரவீன்ஷெட்டி,…

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல்முறையாக சூர்யா நடிக்கும் வாடிவாசல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது. ‘காப்பான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘அருவா’, ‘வாடிவாசல்’ திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளார் இதில் ‘வாடிவாசல்’ திரைப்படம் சூர்யா நாயகனாக நடிக்கும் 40வது படம்வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும். இப்படத்தைத் விகிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை…

நாயுடன் நடித்திருக்கிறேன்- வரலட்சுமி சரத்குமார்

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில்வரலட்சுமிசரத்குமார்,வேல ராமமூர்த்தி,அனிதாசம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டேனி. விரைவில் ஜீ5 இணையத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் கதை,தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி நடக்கிறது. அந்தக் காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல்,…

வெறுப்பு அரசியலை விதைக்க வேண்டாம்-கமல்ஹாசன்

நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளம் அல்ல’ என்று நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது நேற்று(ஜூலை 18) காவி சாயம் ஊற்றப்பட்டதும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்கள்…

சிவகார்த்தியின் சேட்டை செல்லம்மா

சிவகார்த்திகேயன் ஹீரோ’ திரைப்படத்தை தொடர்ந்து நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ ஜூலை 16இரவு வெளியானது. வித்தியாசமான அறிவிப்புடன் வெளியான இந்தப் பாடல் வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். பாடல் துவங்குவதற்கு முன்னதாக ‘எந்த மாதிரி பாடல் வேண்டும்’ என அனிருத் கேட்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் ‘வேற லெலவில் ஹிட் ஆகணும் சார். டிக்…

20 விருதுகளைக் குவித்த குறும்படம்..

நடிகர் விஷால், இயக்குநர்கள் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன், அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர்’ எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். “ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக்கிடைத்தது “என்று அவர்கள் மனதார படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். அறம், தர்மம், நீதி, நியாயம், மனசாட்சி என்பது பற்றியெல்லாம் ஆளுக்கொரு ஒரு விளக்கம் கூறுவார்கள். ஆனால்…