Browsing: Cinema

சினிமா படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கேட்கும் லாபம் படக்குழு

விஜய்சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லாபம். ஸ்ருதிஹாசன் இந்தப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். படத்துக்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி கலந்துகொண்டுள்ள இப்படப்பிடிப்புக்கு விஜய்சேதுபதியை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்துவிடுகிறார்கள். முறையாக கொரோனா முன்னெச்சரிக்கையை பின்பற்றவில்லை. நிறைய ரசிகர்கள் மாஸ்க் போடாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் விஜய்சேதுபதியைச் சந்தித்துவிட்டு செல்கிறார்கள். விஜய்சேதுபதியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரசிகர்களை சந்தித்து பேசியும், கைகொடுத்தும் வருகிறார். இந்த…

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி காலமானார்

டாக்டர் நோவில் கலக்கிய முதல் ஜேம்ஸ் பாண்ட்டும் பழம்பெரும் ஹாலிவுட் நடிகருமான சீன் கானரி காலமானார். அவருக்கு வயது 90 ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் படங்களில் முதன்முதலில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கானரி இன்று காலமானார். டாக்டர் நோ, ஃபிரம் ரஷ்யா வித் லவ், கோல்ட் பிங்கர், தண்டர்பேர்டு, யூ ஒன்லி லைவ் டிவைஸ், டைமண்ட்ஸ் ஆர் பாரேவர் ஆகிய ஆறு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர் நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி…

அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி

தியேட்டர்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்களை, வரும் 15ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அதில், தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு ஒருவர் அமர வேண்டும். 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம், அனைவரும் மாஸ்க் அணிந்த படியே படம் பார்க்க வேண்டும். படம் முடித்த பிறகு ஒவ்வொரு முறையும் தியேட்டர்களை…

திருடா திருடி படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம்!

விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த். லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியுள்ளார். தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷுக்கு திரையுலக பயணத்தில் வெற்றி படமாக இவர் கொடுத்த திருடா திருடி திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஆல்டைம் பேவரைட். பல…

தமிழகத்தில் தியேட்டர்களுக்கான தடை தொடரும்- தமிழக அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மேற்கு வங்காளத்தில் கொரோனா நெறிமுறை வழிகாட்டுதல்களுடன் திரையரங்குகள் வரும் அக். 1 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. இதனால் தமிழகத்திலும் திரையரங்குகளை விரைவில் திறக்கவேண்டும் என்றும் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவில்லை என்றும் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ…

கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி மாற்றம்

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் புகழ்பெற்றது. இதுவரை 50 ஆண்டுகள் சிறப்பாக நடந்து முடிந்த இந்த விழாவின் 51 ஆவது ஆண்டு விழா நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இப்போது அதை ஜனவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என மாற்றப்பட்டுள்ளது.

ஏவிஎம் தயாரிக்கும் இணையத் தொடர்

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நிறுவனம் ஏவிஎம். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கவிருக்கிறது. ஆனால் திரைப்படம் தயாரிக்காமல் திரைப்படங்களுக்கு இணையாக ஓர் இணையதளத் தொடரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏவிஎம்மின் நான்காம்…

சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றை  இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.  ஆனாலும் நம் தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை இவரது காலத்துக்கு முன் இவரது காலத்திற்கு பின் என்று பிரித்துப் பார்க்கும் அளவிற்கு தமிழ் நாடகங்களில் இவரது பங்களிப்புஅளப்பரியது. தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்டவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தூத்துக்குடியை அடுத்த காட்டு நாயக்கன்பட்டியில்…

யுவன்சங்கர்ராஜா தொடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்து சமீப நாட்களாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிரான டி-ஷர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த டி-ஷர்ட் புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் திமுக எம்.பி கனிமொழி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். அதுபோல 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஆடுகளம் படத்தை முடித்து கனடாவில் பிலிம் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது,…

வட சென்னையின் அடையாளம் அகஸ்தியா மூடப்பட்டது ஏன்?

சென்னையில் ஐம்பது ஆண்டுகளை கடந்த தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது ஏற்கெனவே ஆனந்த், பைலட், நட்ராஜ் காமதேனு, பாரகன், ராக்சி, ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, நாகேஷ், ஸ்டார் அபிராமி மெகாமால், தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபகாலத்தில் சாந்தி தியேட்டர், மகாலட்சுமி,ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாரம்பரியம் மிக்க அகஸ்தியா தியேட்டரும் நிரந்தரமாக மூடப்படுவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். வட சென்னையில் உள்ள தண்டையார் பேட்டையில் கடந்த 1967ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கம் 53 ஆண்டுக்கால பழமை…

சிவகார்த்திகேயன் புதிய பட இயக்குனர்

சிவகார்த்திகேயன் இப்போது, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குநர் அசோக் என்பவர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் இயக்குநர் அட்லியிடம் பணியாற்றியவராம். அதைத் தொடர்ந்து இன்னொரு இயக்குநரிடம் கதை கேட்டு அவர்…

சினிமா தியேட்டர் கோவில் போன்றது சேரன் கேள்விக்கு மக்கள் பதில்

கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கும் நிலையில், தியேட்டர்கள் மீண்டும் திறந்தால் அதற்கான ஒத்துழைப்பை மக்கள் கொடுப்பார்களா என்று இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து ஆகஸ்டு 9 அன்றுட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சேரன், “சிவாஜி, எம் ஜி ஆர் என விசில் அடித்து படம் பார்த்து ரஜினி கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்த திரையரங்க பிரமாண்டம் 5 மாதங்களாக முடங்கிக்…

1 2 3 5