Browsing: cm

முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்

இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று (டிசம்பர் 19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், “தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும்” என்ற தகவலைத் தெரிவித்தார். இந்த நிலையில் முருகனுக்கு அதிமுக தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முதல்வர் வேட்பாளர் குறித்த முருகனின் கருத்து சரியானதல்ல எனவும், முதல்வர் வேட்பாளரை…

வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். புரெவி புயல் காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது/இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகிய நிலையில் 60 ஆயிரத்துக்கு அதிகமான ஹெக்டர் நெற்பயிர்கள் நாசமாகின. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட முதல்வர் பழனிசாமி நேற்று நாகப்பட்டினத்திற்கு சென்றார். நேற்றிரவு வேளாங்கண்ணியில் தங்கிய முதல்வர் இன்று காலை நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகிறார். இந்நிலையில் நாகை…

நவம்பர் மாதத்திற்கு ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நாளை முதல்வர் ஆலோசனை

நவம்பர் மாதத்திற்கு அங்கு ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் இதுவரை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. அதேபோல் மெரினா கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூடுவதற்கு முழுமையாக அனுமதி வழங்கப்படவில்லை. 100 பேருக்கு மிகாமல் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்த நிலையில் வேல் யாத்திரையை…

நிவர் நிவாரண பணிகள் – கடலூரில் முதல்வர் சென்னையில் துணை முதல்வர்

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தலைவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு 11.30 மணி முதல் கரையைக் கடக்கத் துவங்கி இன்று அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னையில் இரண்டு நாட்களாக மழை பெய்ததால் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்தும் முடங்கியது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் – முதலமைச்சர் பழனிசாமி

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்த இனிய நாளில், நம் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட, எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வு அமைந்திட, என் தீப ஒளி…

10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு தொழில்நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்து வருகிறார். கொரோனா காலத்திலும் கூட தமிழகத்தில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வழிவகை செய்து வருகிறார். ஆகவே, கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் முதலீடுகளைப் பெற்ற மாநிலமாகத் தமிழகம் உள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் தொழில் தொடங்க 42 புதிய நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் 30,664 கோடி…

முதல்வர் பழனிசாமியுடன் அரசு கொறடா சந்திப்பு

அதிமுக வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. ஆனால் அதற்கு முன் பதட்டமும், பரபரப்புமாக காணப்படுகிறது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இல்லம். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை க்ரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு கொறடா ராஜேந்திரன் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளார்.ஒருபுறம் துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் கே.பி.முனுசாமி மீண்டும் சந்திப்பு நடத்தியுள்ளார். அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், மனோஜ் பாண்டியன்,…

வெங்கய்யா நாயுடு குணமடைய முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை!

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான உடல் பரிசோதனையின் போது அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. இதனால் அவரை மருத்துவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பினால் வீட்டில் தனிமையில் உள்ள துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். வெங்கய்யாவின் நாயுடு…

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளையுடன் 8-ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நிதியுதவி முறைகேட்டுக்கு மத்திய அரசுதான் காரணம் – தமிழக முதல்வர்

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் தொகையில் நடந்த முறைகேடுகள் பற்றி ஒவ்வொரு மாவட்டமாக விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். கிசான் திட்டம் என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் தலைமைச் செயலாளரிடமும் பாஜக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. போலியான விவசாயிகளின் பெயரில் ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்காக ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கோருகிறது. திமுகவும் இது தொடர்பாக நடவடிக்கை…

தமிழகத்தில் இ -பாஸ் ரத்து ஆகிறது – முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

தமிழகத்தில் இ -பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.ஊரடங்கு விதிகளின்படி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ- பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில்…

தலைமை செயலகமா கட்சி அலுவலகமா?- முத்தரசன் காட்டம்

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் போட்ட பதிவு, சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இதனையடுத்து, எடப்பாடிதான் அடுத்த முதல்வர் என பேட்டி, ஓபிஎஸ்தான் அடுத்த முதல்வர் என போஸ்டர்களும் முளைத்தன. இந்த நிலையில் சுதந்திர தின நிகழ்வு முடிந்த பிறகு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் 12 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. அதன்பின்னர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்று அமைச்சர்கள் விவாதித்தனர். முதல்வர்…

1 2 3