Browsing: coaimbatore

இரண்டாவது தலைநகரம் கோவையை அறிவிக்க புதிய கோரிக்கை

தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் விவாதத்தில் கொங்கு மண்டலமும் இணைந்துள்ளது. தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில், மக்கள்தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் வசதிக்காக இரண்டாவது தலைநகரை நிறுவ வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. தென்மாவட்ட மக்களின் நலனுக்காகவும், வேலைவாய்ப்பு பெருகவும் மதுரையைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு குரலெழுப்பினர். ஆனால், திருச்சியைத்தான் எம்.ஜி.ஆர் தலைநகராக்க விரும்பினார், அதனால் திருச்சியைத் தலைநகராக்க வேண்டுமென அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்…

கோவையில் பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

கோவை சுந்தராபுரம் பகுதியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 17) அதிகாலை அந்த சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது.சிலை மீது காவிச் சாயம்…

மோட்டார் சைக்கிளை திருடி வீடு சென்ற பின்னர் பார்சலில் அனுப்பிய கோவை நபர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வெளி மாநிலங்கள், வெளியூர்களில் சிக்கியிருக்கும் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலத்திற்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் பேருந்து மற்றும் ரயில் வசதி ஓரளவுக்கு இருந்தாலும் அதில் பயணம் செய்ய பணம் இல்லாததால் பலர் நடந்தே சென்று விற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஒருவர் தனது சொந்த ஊரான தஞ்சை செல்வதற்காக குடும்பத்துடன் முயன்ற போது அவருக்கு…

கோவையில் கொரோனா பரவாமல் தடுக்க 16 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை திறப்பு: அமைச்சர் வேலுமணி

கோவையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 16 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரம் உழவர் சந்தை பகுதியில் கிருமி நாசினி சுரங்கப்பாதையை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.

சாதி, மதம் பார்த்து மனிதர்களுக்கு கொரோனா வருவதில்லை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: சாதி, மதம் பார்த்து மனிதர்களுக்கு கொரோனா வருவதில்லை வதந்தி பரப்புவது நம்மை நாமே அளித்து கொள்வதை போன்றது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சாதி, மதம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.