Browsing: colleage

முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளன. கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த மாணவர் சேர்க்கை அண்மையில் தொடங்கியது. விண்ணப்பம், கலந்தாய்வு என அனைத்தையும் ஆன்லைன் வழியாகவே செய்யுமாறு அரசு அறிவுறுத்தியதன் பேரில், ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் தொடங்கிய நிலையில், நேற்று முதுகலை படிப்புக்கான அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அதாவது, நவம்பர் 20ம்…

இணைய வழி கல்வி – தொடரும் தற்கொலைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி ,கல்லூரிகள் தொடர்ந்து ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் கைபேசி அல்லது மடிக்கணினியோ இல்லாத நிலையில் பெற்றோரிடம் அவற்றை வாங்கி தர சொல்லி கேட்கின்றனர். ஆனால் இந்த ஊரடங்கால், அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் பிழைப்பு என்று வாழும்…

ஆங்கிலம், உளவியல், பொருளாதாரம் படிக்க விரும்பும் மாணவர்கள்

கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆங்கிலம், பொருளியல், உளவியல் பாடங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 1,547 அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3.1 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கிடையே கரோனா தொற்றால் நடப்பு ஆண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இணையவழியில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் முதல்…

மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டுகிறதா-ராமதாஸ்

கல்லூரி தேர்வுகள் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அனைத்து மாநிலங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதிப் பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்; இறுதித் தேர்வை ரத்து செய்யும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலர் அமித்…

ஆகஸ்டில் கல்லூரி தொடக்கம்: யூஜிசி தகவல்

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்தலாம் என்றும் ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும் செப்டம்பரில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் யூஜிசி அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு குறித்த இந்த அறிவிப்பு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு இன்றி இன்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேடு வழங்கலாம் என்றும் இன்டர்னல் மதிப்பெண்கள் 50 சதவிகிதமும், முந்தைய பருவ தேர்வு மதிப்பெண்கள்…