Browsing: communism

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அரைவேக்காடு அரசியல்….

ஒரு நாளேனும் வந்தது நன்றே; ஒவ்வொரு நாளும் உடனிருந்தோரை மறைத்தல் அத்தனை நன்றா? திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் இன்று தீவுத்திடல் பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவருக்கு பாராட்டுகள். ஒரு பிரபலமாக இருந்துகொண்டு மக்கள் பிரச்சினைக்காக பேசுவதென்பது நல்ல ஒரு கவன ஈர்ப்பை அப்பிரச்சினைக்கு பெற்று தரும். அதே நேரத்தில், அந்த கவன ஈர்ப்பு உண்மைகளிலிருந்து மக்களின் பார்வையை திசை திருப்புவதாகவும் ஆகிவிடக் கூடாது. தீவுத்திடல் பகுதியிலிருந்து பா.ரஞ்சித் பேசியவை என…

மார்க்சின் சிந்தனையை எங்கெல்ஸ் சிதைத்தாரா? – ஏங்கெல்ஸ் பற்றிய தொடர் 2

இரண்டு மனிதர்கள் வாழ்நாள் முழுக்க நண்பர்களாக இருக்கலாம். இரண்டு மேதைகள் அப்படி இருக்க முடியுமோ? மேதமைத்தனம் குறுக்கே வருமே! நம்மூரில் புலமைக் காய்ச்சல் என்பார்களே அது! ஆச்சரியமான விஷயம் மார்க்சும் எங்கெல்சும் கடைசிவரை அத்யந்த நண்பர்களாக இருந்தார்கள். மார்க்சின் மறைவிற்குப் பிறகும் அவரின் நண்பராக வாழ்ந்தார் எங்கெல்ஸ். அவர் உயிரோடு இருந்தால் இவர் எப்படி இருப்பாரோ அப்படி! அது காவிய நட்பு. எதிரிகளுக்கு பொறுக்குமோ? “மார்க்சின் சிந்தனையை எங்கெல்ஸ் அடிப்படையிலேயே சிதைத்துவிட்டார் என்று 20ஆம் நூற்றாண்டில் பல…

எங்கெல்ஸ் அருணன் என்கிற நான்..! – ஏங்கெல்ஸ் பற்றிய தொடர் 1

கார்ல் மார்க்சை தெரிந்த அளவுக்கு பிரடெரிக் எங்கெல்சைத் தெரியாது பலருக்கும். வரும் நவம்பர் 28 அவரின் 200 ஆவது ஆண்டுதினம் என்பதும் தெரியாது. “மூக்குத்தி அம்மன்” புண்ணியத்தில் இவர் மார்க்சின் நண்பர் என்பது நாயகன் எங்கெல்ஸ் ராமசாமி மூலம் ஒரு புதிய பகுதியினருக்கு தெரிந்தது. தமிழ் சினிமாவில் மார்க்ஸ்படமெல்லாம் வந்திருக்கிறது. ஆனால் எங்கெல்ஸ் பெயர் கொண்ட ஒரு நாயகன்வந்ததாக நினைவு இல்லை. அப்படியொரு பெயரைக் கேட்க எனக்கும் உற்சாகம்தொற்றியது. காரணம் ஒருவிதத்தில் நான் எங்கெல்ஸ் அருணன்!சோவியத் ஒன்றியம்…

மக்கள் தோழர் ஜோதிபாசு : ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிச்சுடர்

https://www.amazon.in/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-ebook/dp/B08G4W98MS/ref=sr_1_1?dchild=1&keywords=Sibi+pathippagam&qid=1605764145&s=digital-text&sr=1-1 தூய்மையான வாழ்க்கை. களங்கமற்ற சிந்தனை. உறுதியான நடவடிக்கைகள். இதுதான் ஜோதிபாசு. சுயநலம் சிறிதும் இல்லாமல், ஒடுக்கப்படும் மக்களுக்கு அருகிலேயே கடைசிவரை நிற்பவர்கள்தான் மக்கள் தலைவராக மதிக்கப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அருகில், எத்தனை துயரங்கள் வந்தாலும் தாங்கிக்கொண்டு நின்றார் ஜோதிபாசு. மக்களுக்காக உழைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டால் போதாது. இவர்கள் நமக்காக உழைப்பவர்கள் என்ற நம்பிக்கையை, அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.