Browsing: congress

நேரு மறைவின் போது சிறையில் இருந்த அண்ணாவின் உணர்வுகள்!

நேரு மறைந்தபோது, அண்ணா சிறையில் இருந்தார். அவர் தனது சிறை டைரியில் எழுதிய குறிப்புகளில் நேருவை ஜனநாயக சீமான் மறைந்துவிட்டாரா என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார. 27-5-1964 இன்று பிற்பகல் 3 மணிக்குத் திடுக்கிடத்தக்க செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். இங்கு உள்ள கொடிமரத்தில் கொடி திடீரென பாதிக் கம்பத்துக்கு இறக்கப்பட்டது; விவரம் புரியாமல் கலக்கமடைந்தபடி, காவலாளிகளைக் கேட்டதற்கு, “நேரு காலமாகிவிட்டாராம்‘ என்று கூறினர். – நெஞ்சிலே சம்மட்டி அடி வீழ்ந்ததுபோலாகிவிட்டது. நம்ப முடியவில்லை; நினைக்கவே நடுக்கமெடுத்தது. காலை இதழிலேதான்,…

உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்! – ஆதனூர் சோழன்

உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்…இடதுசாரி இயக்கங்களும், அம்பேத்கரிய இயக்கங்களும் செய்யத் தவறிய கடமையை கன்னையா குமாரும், ஜிக்னேஷ் மேவானியும் செய்யட்டும்… காங்கிரஸில் புதிய சகாப்தம் தொடங்கட்டும். பழம் பெருச்சாளிகளை விரட்டிவிட்டு தனக்கான காங்கிரஸை இந்திரா உருவாக்கினார். ஆனால், மீண்டும் அந்த பழம்பெருச்சாளிகளின் சந்ததிகள் புகுந்து காங்கிரஸை நாசம் செய்கின்றன… இதோ, பெரியாரின் சமூகநீதி புரிந்த, ஏழ்மையின் உண்மை நிலை அறிந்த ராகுல் தலைமையில் புதிய காங்கிரஸ் உண்மையில் ஒரு இளைய காங்கிரஸ் உருவாகட்டும்… பாஜகவை வெல்ல இந்த காங்கிரஸ்…

திமுகவுடன் இணைந்து பணியாற்ற ராகுல் உறுதி!

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக Jவியாழக்கிழமை டெல்லி சென்றார். மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிரதமருடன் 25 நிமிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் மாலை 7 மணிக்கு இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர். இன்று காலை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்…

கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி

மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைவதாகவும், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்றே எதிர்பார்த்திருந்தார் கமல். கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த பின்னரும்கூட, அவரிடம் ஆதரவு கேட்கலாம் என்று கமல் முயற்சித்து வந்தார். அதுவும் நடக்காத நிலையில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்…

ஞானதேசிகன் உடல் இன்று தகனம்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நேற்று உயிரிழந்தார். முன்னாள் எம்பியான ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் நவம்பர் 11ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2009 முதல் 2013 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். வெளிப்படை பேச்சு, அறிவாற்றல் மிகுந்த வழக்கறிஞர் என் பன்முகங்களை கொண்ட இவர் காங்கிரஸில் இருந்து…

மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது- மம்த பானர்ஜி

மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்தாண்டு மே மாதத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், முதல்வர் மம்தாவின் திரிணமுள் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. எனவே திரிணாமுள் காங்கிரஸ் கட்சி இப்போதே பிரச்சாரத்திற்கு ஆயத்தாமாகிவிட்டது. இந்நிலையில் ஒன்று ஒரு பேரணியில் பேசியதாவது : நாம் சிறப்பாக வேலை செய்தாலும அவை மோசாமனது என்ற விமர்சிக்கப்பட்டுகிறது. பிரதமர் கேர் நிதி தொடர்பாப…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் (71), கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.   அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டநிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல் உறுப்புகளும் பரவியது. இதையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி  அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும்…

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தருண் கோகாய் உயிரிழப்பு…

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அசாம் மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவருமான தருண் கோகாய் (86) கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அதன்பின்னர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு கரோனா பாதிப்பு நீக்கினாலும், கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இதனையடுத்து உடல்நலம் தேறி கடந்த அக்டோபர்…

தொகுதிக்காக திமுகவிடம் பேரம் பேசல.. – குண்டுராவ்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கீட்டில் பேரம் பேசாது என குண்டுராவ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேர்தலில் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் “தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்வோம். தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேசும் எண்ணமில்லை. வழக்கமான…

7 பேர் விடுதலையில் ஆட்சேபம் இல்லை” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும், குற்றமற்றவர்கள் என்பது உண்மை எனில், அவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார். மனுநீதி குறித்த திருமாவளவனின் கருத்தில்…

ராஜஸ்தான் அரசும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம்

பஞ்சாபை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானிலும் அம்மாநில அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தவிர்க்க தேவையான சட்டங்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றும்படி அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் முதல்வர்களுக்கு அறிவுறுத்தினார். முதல்வர் கேப்டன்…

1 2 3