Browsing: Corona lockdown

இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஜூலை 27-ம் தேதி வரை இந்தியா முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிப்படையாக அறிவித்து வந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியதால், கடந்த 28-ம்தேதி முதல் மொத்த பாதிப்பு தகவல் வெளியிப்படவில்லை. குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றுபவர்களின் விவரங்ளை வெளியிட்டு வருகிறது. இதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 36,511 பேர் உயிரிழந்த…

இயக்குனர் ராஜமௌலி குடும்பத்தாருக்கு கொரானா தொற்று உறுதியானது

இந்தியாவில் கொரோனா பரவல் நகர்புறங்களில் இருந்து கிராமங்கள் வரை  நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பொதுமக்களை கடந்து, அமைச்சர்கள்,அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், இன்று தெலுங்கு பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சல் தானாகவே குணமடைந்தாலும், நாங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அந்த சோதனை முடிவில்…

வியாபாரமும், பொதுத் தொண்டும் – Periyar Life History – 3

ராமசாமி வீட்டுக்கு வந்தவுடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரையும்விட சினனத்தாயம்மாளும், நாகம்மாளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வீட்டில் என்ன நடந்தது? தந்தை பதறினார். பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினார். ராமசாமியின் வெளியூர் நண்பர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார். தந்திகள் அனுப்பினார். 2 ஆயி ரம் ரூபாய் வரையில் செலவு செய்து சோர்ந்து போனார். மகனை இழந்து விட்டோம் என்ற முடிவுக்கே வந்துவிட் டார். வீடு பழைய நிலைக்கு திரும்பியது. ராமசாமியை வியா பாரத்தில்…

லடாக் எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி அவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

லடாக் எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும் தெரிவிக்க வேண்டும், உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம் என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருமணமும் துறவறமும்! PERIYAR LIFE HISTORY – 2

திருமணமும் துறவறமும் வசதியான குடும்பத்து இளைஞர் என்றாலே அவரைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் கும்மாளமிடத்தான் செய்யும். இரவு ராமசாமி எப்போது மண்டியைப் பூட்டுவார் என்று நண்பர்கள் காத்திருப்பார்கள். கடையைப் பூட்டியவுடன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் தொழிலாளிகளின் வீடுகளுக்கு செல்வார். அப்போது, இதற்காகவே தாசிகள் எனப்படும் பெண்கள் இருந்தனர். மகனின் நடவடிக்கைகளைப் பார்த்த பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர். தன்னு டைய மாமா ரெங்கசாமி நாயக்கரின் மகள் நாகம்மாளை திருமணம் செய்ய விரும்புவதாக ராமசாமி கூறிவிட்டார், ரெங்கசாமி…

பெங்களூருவிலிருந்து தென்கொரியாவுக்கு விமானம் ஏற்பாடு செய்த கொரிய தமிழ்ச் சங்கத்தின் “ஆபரேசன்-காமராஜர் தந்த கல்வி”

30 மே சியோல், உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவியுள்ள இக்காலகட்டத்தில் மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாட்டு பயணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் பாதிப்புகள் இருந்தாலும் தென் கொரிய அரசாங்கம் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தாமல் மிகச்சிறப்பாக நோய் தடுப்பு, விழிப்புணர்வு வள மற்றும் ஆளுமை மேலாண்மை நடைமுறைகளை கையாண்டு நோய் பரவுவதைத் சிறப்பாக தடுத்து வருவதை உலகறியும். உள்நாட்டு போக்குவரத்து தடைபடாமல் வெளிநாட்டு போக்குவரத்து மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவில் இந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள…

‘என் குழந்தைகள் என்னை நினைத்து பெருமைப்பட வேண்டும்’ – ஜோதிகா

2015 ஆம் ஆண்டில் அவர் ரீ எண்ட்ரி ஆனதிலிருந்து, ஜோதிகாவின் திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. அவர் ஒரே மாதிரியான பெண் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. எல்லா வாய்ப்புகளுக்கும் நன்றியுடன் உணர்கையில், நடிகை தனது நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி சமூகம் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக பெண்களின் சவால்களைப் பற்றி பேச விரும்புகிறார். அவரது வரவிருக்கும் திரைப்படமான ’பொன்மகள் வந்தாள்’ டிரெய்லர் ஒரு தொடர் கொலையாளி வழக்கு சம்பந்தப்பட்ட, நீதிமன்ற படத்திற்கு உறுதியளித்தது. இது ஒரு த்ரில்லர் மட்டுமல்ல, படத்தில்…

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா அதிகம் பரவாமல் சராசரி அளவில் வைத்துள்ளோம் – விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா அதிகம் பரவாமல் சராசரி அளவில் வைத்துள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மேற்கொண்டார்.அப்போது அவர் அளித்த பேட்டி: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் ஒரே சராசரி அளவிலேயே இருக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் தேவையான படுக்கை…

லாக்டவுனில் பிரகாஷ் ராஜுக்கு மனைவியும் மகளும் செய்து கொடுத்த பீட்சா !

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது…

ஊரடங்கு நேரத்திலும் உறங்காத குஜராத் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்!

மற்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டம் குஜராத் மாநிலத்துக்கென்று தனிச் சட்டம் இருக்கிறதோ என்று நினைக்கும் வகையில் அந்த மாநிலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகள் தொடர்ச்சியாக இயங்குகின்றன. கரும்பு வயல்களில் தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். குஜராத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக குறிப்பிட்ட சீசனில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் வருவார்கள். கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவவ் ஊர்களுக்கு திரும்பினர். அரசு…

23 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 3000 விதம் டெபாசிட் செய்துள்ளார் – சல்மான்கான்

பாலிவுட்டில் சுமார் 23 ஆயிரம் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானமின்றி பசியால் வாடுவதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், அந்த 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் சுமார் 7 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார் ஒவ்வொரு தொழிலாளர்களிடம் இருந்து அவர்களுடைய யூனியன் மூலம் வங்கி கணக்கை பெற்று ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூபாய் 3000 அவர்களுடைய வங்கி கணக்கில் தானே டெபாசிட் செய்துள்ளார். 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 3000…

ஊரடங்கு பணியில் உயிர்விட்ட காவலர் – மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள மயிலாப்பூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி, சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் சென்னை பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அருண்காந்தியின் மறைவிற்கு திமுக தலைவர் மு,க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும்…