Browsing: corona virus

வட சென்னையின் அடையாளம் அகஸ்தியா மூடப்பட்டது ஏன்?

சென்னையில் ஐம்பது ஆண்டுகளை கடந்த தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது ஏற்கெனவே ஆனந்த், பைலட், நட்ராஜ் காமதேனு, பாரகன், ராக்சி, ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, நாகேஷ், ஸ்டார் அபிராமி மெகாமால், தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபகாலத்தில் சாந்தி தியேட்டர், மகாலட்சுமி,ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாரம்பரியம் மிக்க அகஸ்தியா தியேட்டரும் நிரந்தரமாக மூடப்படுவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். வட சென்னையில் உள்ள தண்டையார் பேட்டையில் கடந்த 1967ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கம் 53 ஆண்டுக்கால பழமை…

தமிழகத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தமாக 87 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதவழிபாட்டு தலங்கள் திறப்பு எப்போது? – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில்,…

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..கோயம்பேடு சந்தையிலிருந்து வியாபாரிகள் மூலமாக பரவ தொடங்கிய கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 6535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1824 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உணவக ஊழியர்கள், உணவு வாங்கி சென்றவர்களை…

இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்கிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.…

கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஜூன் இறுதியில் உச்சத்தில் இருக்கும்; ஆய்வில் தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜூன் இறுதியில் உச்சத்தை தொடலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு மீண்டும் ஊரடங்கினை மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதில் நோய் தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. சில நிபந்தனையுடன் அனைத்து மண்டலத் திலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட் டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள்…

சீனா முதல் இஸ்லாம் வரை சீறித் தாக்கும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் அறிமுகமானதில் இருந்து அதை வைத்தே அமெரிக்காவில் ட்ரம்பும், இந்தியாவில் மோடியின் பாஜக அரசும் மிகப்பெரிய அரசியலை நடத்துகிறார்கள். அதிலும் பாஜக நடத்தியதோ, மதவாத அரசியல். இந்தியாவில் இஸ்லாமியர்களால்தான் கொரோனா வைரஸ் பரவியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. 2019 டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உடனே, அந்த கிருமியின் தீவிரத்தன்மை உலகிற்கு அறிவிக்கப்பட்டது. சீனாவில் கிருமி கண்டறியப்பட்டவுடன், அந்த கிருமியின் தன்மையை அறிந்த தென்கொரியா விஞ்ஞானிகள் உடனடியாக கிருமியைக்…

கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் தேவை- பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் தொடர்பாக பிரதமருடனான ஆலோசனையின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 54 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட்…

உதவிக்கரம் நீட்டுவாரா தல அஜித் .- தீ்ப்பெட்டி கணேசன் எதிர்பார்ப்பு

ஊரடங்கு உத்தரவு காலத்தில் தான் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் உதவி செய்யும் நிலையில், தனக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை நடிகர் அஜித் ஏற்று உதவ முன்வருவாரா என்று தீப்பெட்டி கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். ரேணிகுண்டா, பில்லா 2, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன். கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தீப்பெட்டி கணேசனுக்கு நடிகர் விஷால் தரப்பினர் அரிசி மளிகை பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர். அதற்கு நன்றி…

இஸ்லாமியர்களை தொடரும் இன்னல்கள்!

இப்போதோ, கொரோனா வைரஸை வைத்து, இஸ்லாமியர்களையே ஒரு வைரஸாக சித்தரித்து பரப்பும் போக்கு அதிகரித்துள்ளது. எல்லா காலத்தையும் போல இஸ்லாமியர்கள் இதையும் கடந்து வருவார்கள்.