Browsing: corona

என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது யாரும் மிரட்டல் அரசியல் செய்ய முடிந்ததில்லை. மிரட்டப்படுவோருக்கு பாதுகாப்பு தரவேண்டியது ஒரு அரசின் கடமை. அந்த வகையில் நடிகர் சூரியாவை ஆளாளுக்கு மிரட்டுகிறார்கள். ஒரு கட்சியின் முக்கிய தலைவரே மிரட்டுகிறார். அவருடைய படத்தை திரையிட திரையரங்குகள் பயப்படுகின்றன. 5 கோடி ரூபாய் கேட்டு ஒரு சாதிச்சங்கம் மிரட்டிக் கெடு விதிக்கிறது. இதெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் சாத்தியமே இல்லை. திமுக அரசாங்கம் அமைந்தால்தான் இத்தகைய மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் அதிகமாகின்றன. ராமதாஸ் ஒரு மண்ணும் இல்லை…

பிரிட்டனின் ஆட்சி முறையை மாற்ற எலிஸபெத் ராணி திட்டமா?

பிரிட்டிஷ் ராணி எலிஸபெத் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அல்லது, பொறுப்புகளை கவனிக்க இயலாத அளவுக்கு அவர் முதுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். உலகின் மிக நீண்டகாலம் அரசுப் பொறுப்பில் இருந்த ராணி என்ற புகழுடன் பிரிட்டனை கட்டியாண்ட இரண்டாம் எலிஸபெத், பொறுப்புகளை தனது மூத்த மகன் சார்லஸிடம் ஒப்படைக்க விரும்புவதாக தெரிகிறது. சார்லஸுக்கு பிரிட்டன் மக்களிடம் போதுமான செல்வாக்கு இல்லாத நிலையில், அவருக்கு மாற்றாக வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவும் ராணி திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகின்…

வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை

தமிழ்நாட்டில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தற்போது தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது. மேலும், நீதிமன்ற…

இந்தியாவின் சாபக்கேடு அதன் நீதிமன்றங்கள்!

கொரோனா சூழல் காரணமாக… இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு ஐம்பது நாட்கள் கோடை விடுமுறை. வழக்கமாக இது 42 நாட்கள் மட்டுமாம். மே 8-ம் தேதி விடுமுறை தொடங்கி ஜூன் மாதம் 26-ம் தேதிவரை நீடிக்குமாம். அதே கொரோனா சூழல்…. எட்டு மணி நேரம் பணி செய்ய வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அதன் அடுத்தகட்டப் பணியாளர்கள், சுகாதாரத்துறையின் பல்வேறு நிலையில் இருக்கும் ஊழியர்கள்,காவல்துறையினர் போன்ற எல்லோரும் அல்லும் பகலும் அயராது வேலை செய்கின்றனர்.…

ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!

இனி சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை மிக தந்திரமாக மூன்று விதமாக பிரித்து தந்திருப்பதும், இதுவரை ஆர்எஸ்எஸ் மோடியின் இந்திய ஒன்றிய அரசு இதை பற்றி வாய் திறக்காமல் யோக நிலையில் நிற்பதும் காவிகளும்,கார்ப்பரேட்களும்… கொரொனாவும், மூச்சுதிணறலும் எப்படி பிரிக்கமுடியாதோ அதுபோன்ற பந்தபாச பிணைப்பு எங்களுடையது என வெளிப்படுத்தி இருக்கின்றனர்… அது மட்டுமல்லாமல் சீரம் இனி தயாரிக்கும் தடுப்பூசி மருந்தில் 50%-த்தை மோடியின் இந்திய ஒன்றிய அரசுக்கும், மீதி 50%-த்தை ஒன்றியத்தின் பிற மாநிலங்களுக்கும்…

இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!

கோவிட் நோய்க்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளை பெற்ற திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியான உடன் பலருடைய சந்தேகம்… இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா வருமா? பிறகு எதற்கு தடுப்பூசி போட வேண்டும்? இதற்கான எனது பதில் விளக்கங்கள் முதல் விளக்கம் கொரோனாவுக்கு எதிரான முதல் தலைமுறை தடுப்பூசிகள் கோவிட் தொற்றை தடுக்காது. கோவிட் நோயை தடுக்கும் விதத்திலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன அதாவது தடுப்பூசி…

பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 424 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 506 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 21 ஆயிரத்து 672 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18…

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 20 நாட்களேயான குழந்தையின் சடலத்தை ஏற்க பெற்றோர் மறுத்துள்ளனர். பிறந்து 20 நாட்களேயான சிசுவொன்று, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் உயிரிழந்தது. குறித்த சிசுவின் உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பி.சி.ஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும்,…

கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட நான்கு தன்னார்வலர்களுக்கு முக பக்கவாதம் என்ற பிரச்சினை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நான்கு பேருக்கு, முக பக்கவாதம் என்று அழைக்கப்படும் Bell’s palsy என்ற பிரச்சினை உருவாகியுள்ளது. இந்த பிரச்சினை ஏற்பட்டவர்களுக்கு, முகம் ஒருபக்கமாக தொங்கிவிடும், சிலருக்கு சத்தம் பிரச்சினையை ஏற்படுத்தலாம், சிலருக்கு சுவை அறியும் சக்தி போய்விடலாம், சிலருக்கு தலைவலி அல்லது பாதிக்கப்பட்ட பக்கத்தில் முகத்தில் வலி ஏற்படலாம். எதனால் இந்த முக…

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.” என்ற அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில்,…

1 2 3 23