Browsing: Coronavirus

இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஜூலை 27-ம் தேதி வரை இந்தியா முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிப்படையாக அறிவித்து வந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியதால், கடந்த 28-ம்தேதி முதல் மொத்த பாதிப்பு தகவல் வெளியிப்படவில்லை. குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றுபவர்களின் விவரங்ளை வெளியிட்டு வருகிறது. இதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 36,511 பேர் உயிரிழந்த…

இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 7,93,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 475 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால்…

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகள் ; காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றது உ.பி. அரசு

கொரோனா வைரஸ் காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை சிறப்பு திட்டங்கள் மூலம், இலவசமாக இந்தியா அழைத்து வந்தனர். ஆனால் நம்முடைய நாட்டில் சாப்பாட்டிற்கு வழியின்றி சிக்கித் தவிக்கும் மக்களை இப்படி சிரமத்திற்கு ஆளாக்குவதா என்று கேள்வி எழுப்பினார் சோனியா காந்தி. மேலும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் புலம்…

வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்க 11 விமானங்கள் தயார்

கொரோனா பாதிப்பு, முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் முடங்கியுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு மே 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை, 64 விமானங்கள், 3 கப்பற்படை கப்பல்கள் உள்ளிட்டவைகளை அனுப்ப உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், விமானத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக அபுதாபியில் தவித்து வரும் கேரளாவை சேர்ந்த 209 பேர் கொச்சி அழைத்து வரப்பட உள்ளனர். அடுத்த விமானம் மூலம் 200…

கொரோனா ஹாட்ஸ்பாட் – நான் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் – லாவ் அகர்வால்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா பரவும் மைய இடங்களாக விளங்கும் பகுதிகளை கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும், கொரோனா பாதிப்பு ஏற்படாத பகுதிகளை கொரோனா நான் ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும் மாவட்டங்களை நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம். இதன்படி, 170 மாவட்டங்கள்…

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக இருந்தது.  இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா வைரசால்…

குஜராத் மாநில முதல்மந்திரி தலைமையில் நேற்று காலை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது மாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 10 ஆயிரத்து 815 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 353 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மார்ச் 25 முதல் வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஆனால், நேற்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம்…

தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 106 பேருக்குக் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நேற்று வரை 969 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 1075 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 50 பேர் வரை குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் விதமாக தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனை…

தமிழகத்தில் ஆறே நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,761 லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 911 பேரும், டெல்லியில் 903 பேரும், ராஜஸ்தானில் 553 பேரும், தெலுங்கானாவில் 473 பேரும், கேரளாவில் 364 பேரும், ஆந்திராவில் 363 பேரும்…

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 22-வது இடம்

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 22-வது இடத்தை எட்டியுள்ளது. ஊரடங்கு அறிவிப்புக்கு முன் 60 நாடுகளுக்கு பின்னால் இருந்து இந்தியா தற்போது 22 இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447-ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல அதிகரித்து வருகின்றன. மருத்துவர்கள், காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை மறந்து கொரோனா பாதித்தவர்களை மீட்கவும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் கொரோனா ஏற்படும் ஆபத்து உள்ளதால் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்…

சென்னை ஸ்டான்லி மருத்துமவமனையில் கொரோனா சோதனை கியாஸ்க் – அசத்தும் சுகாதாரத்துறை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருபவர்களை சோதனை செய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கியாஸ்க் செயல்பாட்டினை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா சோதனையை எளிதாகவும் அதேசமயம் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள தனிநபர் பாதுகாப்பு உபகரணம் (PPE) தேவைப்படாத கியாஸ்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கியாஸ்க் முழுவதும் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைக்குப்பிறகும், கையுறைகள், சானிடைசரின் உதவியுடன்…