Browsing: court

மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்

சினிமாவில் சாதித்த நடிகர் கமல்ஹாசன் அரசியலிலும் கால்பதித்துள்ளார். இவரது ரசிகர்கள் அதிகளவில் இவரது கட்சியில் இருந்தாலும்கூட மக்களிடம் மக்கள் நீதி மய்யம் போய்ச் சேர கமல்ஹாசன் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அரசின் கடமைகளைச் சுட்டிக் காட்ட மக்கள் நீதி மய்யம் என்றுமே தயங்கியதில்லை. கிராம சபைகளைக் கூட்ட வேண்டியதன் அவசியத்தை தமிழ்நாடு அரசிற்கு அறிவுறுத்த சென்னை உயர்நீதி மன்றத்தை மக்கள் நீதி மய்யம் அணுகியுள்ளது.…

தற்கொலை மரணங்களுக்கு இழப்பீடு, அரசு சலுகை தருவது தற்கொலைகளை ஊக்குவிக்கும்-நீதிமன்றம்

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது என்பது தற்கொலையை ஊக்குவிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நீட்தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. அரியலூர் அனிதாவை தொடர்ந்து தற்போது நாமக்கல் மோதிலால் வரை இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனிடையே மருத்துவப் படிப்பில் இடம் பெறுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்…

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக 25 வழக்கறிஞர்கள் கடிதம்

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சுதா ராமலிங்கம் உள்பட 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். நடிகர் சூர்யா மீதான நடவடிக்கை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2011-12 ஆம் ஆண்டில், இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட லிப்ரா மொபைல்ஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பிரத்தியேக ரிங்டோன் இசை அமைத்துக் கொடுத்ததற்காக ரூ.3.47 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். இதனைத் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு நேரடியாகச் செலுத்தும் படி ரகுமான் கூறியிருக்கிறார். அதாவது ரூ.3.47 கோடி ஊதியம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் அதற்கு வரி செலுத்தவில்லை. அறக்கட்டளை மூலம் வருமானம்…