Browsing: covid-19

தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்

சாமீ எனக்கொரூ உண்மை தெரிஞ்சாகனும்… ஆமா, சாமீ… 2021 ஏப்ரல் 14 ஆம் தேதி அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோழராஜனாகிய நானும் வெற்றி ஆகிய எனது மனைவியும் ஆதார் ஜெராக்ஸ் கொடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அன்றைய நிலையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யவில்லை. ஊசிபோட்ட சிஸ்டர் எனது ஆதார் ஜெராக்ஸில் உள்ள பெயரை ஒரு நோட்டில் பதிவு செய்தார். முதல் ஊசி போட்டதற்கான தகவல் வந்தது. ஆனால், எனது பெயர் அ.சோழராஜன் என்பதற்கு பதிலாக…

இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!

கோவிட் நோய்க்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளை பெற்ற திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியான உடன் பலருடைய சந்தேகம்… இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா வருமா? பிறகு எதற்கு தடுப்பூசி போட வேண்டும்? இதற்கான எனது பதில் விளக்கங்கள் முதல் விளக்கம் கொரோனாவுக்கு எதிரான முதல் தலைமுறை தடுப்பூசிகள் கோவிட் தொற்றை தடுக்காது. கோவிட் நோயை தடுக்கும் விதத்திலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன அதாவது தடுப்பூசி…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமன்னா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த லிஸ்ட்டில் நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார். கொரோனாவால் தமன்னா பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நானும், எனது குழுவைச் சேர்ந்தவர்களும் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினாலும், துரதிர்ஷ்டவசமாக கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்கு ஆளானேன். கொரோனா சோதனை…

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெங்களூருவிலிருந்து தென்கொரியாவுக்கு விமானம் ஏற்பாடு செய்த கொரிய தமிழ்ச் சங்கத்தின் “ஆபரேசன்-காமராஜர் தந்த கல்வி”

30 மே சியோல், உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவியுள்ள இக்காலகட்டத்தில் மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாட்டு பயணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் பாதிப்புகள் இருந்தாலும் தென் கொரிய அரசாங்கம் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தாமல் மிகச்சிறப்பாக நோய் தடுப்பு, விழிப்புணர்வு வள மற்றும் ஆளுமை மேலாண்மை நடைமுறைகளை கையாண்டு நோய் பரவுவதைத் சிறப்பாக தடுத்து வருவதை உலகறியும். உள்நாட்டு போக்குவரத்து தடைபடாமல் வெளிநாட்டு போக்குவரத்து மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவில் இந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள…

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பேருந்துகள் ; காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றது உ.பி. அரசு

கொரோனா வைரஸ் காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை சிறப்பு திட்டங்கள் மூலம், இலவசமாக இந்தியா அழைத்து வந்தனர். ஆனால் நம்முடைய நாட்டில் சாப்பாட்டிற்கு வழியின்றி சிக்கித் தவிக்கும் மக்களை இப்படி சிரமத்திற்கு ஆளாக்குவதா என்று கேள்வி எழுப்பினார் சோனியா காந்தி. மேலும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் புலம்…

பிணந்தின்னும் ஆட்சியில் இன்னும் எத்தனை கொடுமைகளோ?

நண்பர்கள் இருவரும் குஜராத்தின் சூரத் நகரில் ஒரே அறையில் தங்கி தினசரிக் கூலிக்கு வேலை செய்துவந்தவர்கள். ஒருவர் நூல் தொழிற்சாலைத் தொழிலாளி, இன்னொருவர் விசைத்தறித் தொழிலாளி. ஊரடங்கால் வருமானம் இழந்த அவர்களின் கையிருப்புப் பணம் உணவுக்கே செலவாகிக்கொண்டிருந்தது. ஊரடங்கு இப்போதைக்கு முடியப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்த அவர்கள், விவசாயத் தொழிலாளர்களாகப் பிழைத்துக்கொள்ளலாம் என்று உ.பி. மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு லாரி பிடித்துத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். லாரியில் வேறு சிலரும் இருந்தார்கள். ஒரு நண்பனுக்குத்…

அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு துவங்கியுள்ளன. சியாட்டில் நகரில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும்…

அதிரடியாக சம்பளத்தைக் குறைத்த விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது நடிப்பு மற்றும் இசையால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறார். அவரது படங்கள் எப்போதுமே ரசிகர்களை கவரும் வகையில் அமையும். “கொலைகாரன்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று படங்களில் பணியாற்றி வருகிறார். விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரின் “பிச்சைக்காரன்” திரைப்படம் தொலைக்காட்சி வெளியீட்டிலும் பெரிய சாதனை படைத்தது. தற்போது FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T.…

மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறாரா? அரசாங்கம் நடத்துகிறாரா?

கட்சி என்றால் கட்டிப் போட்டுவிடலாம். அதுவே ஒரு அமைப்பு என்றால் அமுக்கி வைத்துவிடலாம். ஆனால், திமுக என்பது ஒரு இயக்கம். இயக்கத்தை முடக்கிவிட முடியாது என்பதை அதன் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள். அடக்குமுறைகளையும், தோல்விகளையும் கடந்து அது 70 ஆண்டுகளுக்கு மேலாக அது தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் அரசியலை அந்த இயக்கம்தான் தீர்மானித்திருக்கிறது. அண்ணா தொடங்கி, கலைஞர் முடிய என்று அந்த இயக்கம் முடிவே இல்லாமல் இயங்கியது. கலைஞருக்குப் பிறகு அதை முடக்கிவிடலாம் என்று நினைத்தவர்களை…

சீனா முதல் இஸ்லாம் வரை சீறித் தாக்கும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் அறிமுகமானதில் இருந்து அதை வைத்தே அமெரிக்காவில் ட்ரம்பும், இந்தியாவில் மோடியின் பாஜக அரசும் மிகப்பெரிய அரசியலை நடத்துகிறார்கள். அதிலும் பாஜக நடத்தியதோ, மதவாத அரசியல். இந்தியாவில் இஸ்லாமியர்களால்தான் கொரோனா வைரஸ் பரவியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. 2019 டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உடனே, அந்த கிருமியின் தீவிரத்தன்மை உலகிற்கு அறிவிக்கப்பட்டது. சீனாவில் கிருமி கண்டறியப்பட்டவுடன், அந்த கிருமியின் தன்மையை அறிந்த தென்கொரியா விஞ்ஞானிகள் உடனடியாக கிருமியைக்…

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அரபு நாடுகள் முடிவு கட்டுமா?

“ஒத்த சைக்கிளை கொண்டு வந்து மொத்த ஊரையும் சரிச்சுப்புட்டியேடானு” ஒரு படத்துல வசனம் வரும். இங்கே என்னடான்னா ஒரே ஒரு ட்வீட்டை போட்டுட்டு, ஒட்டு மொத்த சங்கிகளின் கூடாரத்துக்கும் ஒருத்தன் வேட்டு வச்சிருக்கான். பாவம் இஸ்லாமிய நாடுகளின் கொந்தளிப்பில் ஆர்எஸ்எஸ்சும், மோடி சர்க்காரும் ஆட்டம் கண்டிருக்கிறார்கள். இப்போது சங்கிகள் அரபி மொழியை கற்று வருகிறார்கள். எதுக்காக என்றா கேட்கிறீர்கள்? வேற எதுக்கு மன்னிப்புக் கேட்கத்தான். அவர்களுடைய பிதாமகன்கள் சாவர்க்கரும் வாஜ்பாயும் ஆங்கிலேயர்களிடம் ஆங்கிலத்தில் மன்னிப்புக் கேட்டார்கள். இவர்களோ…