Browsing: covid

வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை

தமிழ்நாட்டில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தற்போது தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது. மேலும், நீதிமன்ற…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.49 லட்சத்தை தாண்டியது;

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,553-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 28,637 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 22,674 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 551 உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,34,621 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24…

தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 69 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,898-ஆக அதிகரித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி

அதிமுக எம்எல்ஏ-விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்தது நீட்டிக்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் வருகிற ஜூன் 30ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது…

இந்தியாவில் கரோனாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது, இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 386 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் இந்தியாவில் கரோனாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 329 பேர் குணமடைந்துள்ளனர், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 779 பேர் சிகிச்சையில் உள்ளனர்.. மகாராஷ்டிராவில்…

நடிகை சமந்தா வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதறகான சூப்பர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது நடிகை சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை அவர் வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை மட்டும் கொண்டு சுலபமான முறையில் வீட்டில்…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,76,583-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,745-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,66,598-லிருந்து 2,76,583-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,466-லிருந்து 7,745-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,29,215-லிருந்து 1,35,206-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெ.அன்பழகா உன்னை இனி காணவே முடியாதா? மு.க.ஸ்டாலின் இரங்கல்

கொரோனா நிவாரணப் பணிகளில் ஓய்வின்றி மக்கள் பணியாற்றிய திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக ரத்தம் பாய்ந்த உடல். தனது நலம் பாராமல் கழகத்தின் உத்தரவை ஏற்று கொரோனா நிவாரணப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் காரணமாகவே கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதோ இனி என்றுமே காண முடியாமல் சென்றுவிட்டார். கலைஞரின் அன்பைப் பெற்ற செயல்வீரரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த…

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காற்றில் பறக்கவிடப்பட்ட கட்டுப்பாடுகள்: நெல்லை பேருந்துகளில் பயணிகள் கூட்டம்

கட்டுப்பாடுகள்கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் ஓடாமல் இருந்த நிலையில் ஒரு சில நிபந்தனைகளுடன் ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயங்குகின்றன. நிர்வாக வசதிக்காக 8 மண்டலங்களாக போக்குவரத்து கழகங்கள் பிரிக்கப்பட்டு 50 சதவீத பேருந்துகளை இயக்கப்படுவதாகவும், 60 சதவீத பணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தமிழகத்தின்…

இதுதான் ஊரடங்கை செயல்படுத்தும் லட்சணமா? – ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 27,256, சென்னையில் மட்டும் 18,693. கோடம்பாக்கம், இராயபுரம்,…

இந்தியாவில் 2.26 லட்சம் பேருக்கு கரோனா!

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சத்தைத் தாண்டியது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று (05/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 2,26,770 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,075- லிருந்து 6,348 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை…