Browsing: CSK

பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?

ஐபில் போட்டியில் இன்று சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 13வது சீசனில் இன்றைய 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 6 இல் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி…

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபில் 13வது சீசனில் இன்று வாழ்வா ? சாவா? என்ற போராட்டத்தை எதிர்கொள்ளவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. அபுதாபியில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை காண சென்னை அணி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். காரணம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று தோற்கும்…

தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்

கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், ரூ.1.50 லட்சம் செலவு செய்து தனது வீட்டை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய சம்பவம் வியப்படையச் செய்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கும் ஒரே விஷயம் ஐபிஎல் போட்டி. தான் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் தல தோனிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த மேட்ச் ஜெயிக்குமா என ரசிகர்கள் துவண்டு கிடக்கும் நேரத்தில், அதிரடியாக விளையாடி பல போட்டிகளை ஜெயிக்க வைத்த தோனி மக்கள் மனதில்…

சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 29 ஆவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் சென்னை அணியில் தமிழக வீரர் ஜெகதீசன் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பியூஸ் சாவ்லா சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் பாப் டுபிளசிஸ் களமிறங்கினர். டுபிளசிஸ் டக் அவுட்டாக, அதிரடியாக…

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 7 போட்டிகளில் சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டு போட்டிகள் மட்டுமே வென்றுள்ளது. இன்றைய போட்டியுடன் சேர்த்து எஞ்சியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை அணிக்கு உள்ளது. அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. சென்னை – ஹைதராபாத்…

சிஎஸ்கே வீரர்கள் கடமைக்கு விளையாடுகிறார்கள் –சேவாக்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் மிகவும் பரிதாபகரமான தோல்வியை அடைந்தது. இத்தனைக்கும் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்து சென்றனர். ஆனால் 12 ஆவது ஓவரில் இருந்து 15 ஓவர் வரை சுனில் நரேனின் பந்துவீச்சு போட்டியையே மாற்றியது. தோல்விக்கு மிக முக்கியமானக் காரணமாக சொல்லப்படுவது கேதார் ஜாதவ்வின் டெஸ்ட் இன்னிங்ஸ்தான். இக்கட்டான…

தோனிக்கு ஆதரவாக வைரல் ஹேஷ்டேக்

சமூக வலைத்தளமான ட்விட்டரில் #ziva என்ற ஆதரவு ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாகப் பல திருப்பு முனைகள் நடந்து வருகிறது. ரசிகர்களுக்கும் ஏன் அணிகளுக்குமே அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் மேட்ச் தினமும் த்ரில்லாக போய்க்கொண்டுள்ளது. இந்நிலையில் இம்முறை அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணி இரு மேட்சுகளில் மட்டுமே ஜெயித்தது. மற்ற நான்கில் தோற்றுள்ளது. சமீபத்தில் போட்டியில் சென்னை அணி 7…

ஐ.பி.எல் போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் எம்.எஸ்.தோனி!

ஐபிஎல் 2020 போட்டிகள் உற்சாகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்ற ஆண்டு சாம்பியன் மும்பையை எதிர்கொண்டது தல தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் முதல் வெற்றி பெற்றது. யார் கண் பட்டதோ அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை பேட்டிங்கில் வழக்கம்போல முரளி விஜய், சொதப்ப, டூ பிளஸி மானத்தைக் காப்பாற்றினார். விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளிலும் சென்னை அணி…

சி.எஸ்.கே தெறி ஆட்டம்

தொடர்ந்து 3 தோல்விகளை எதிர்கொண்ட சென்னை அணி, அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இது அணி வீரர்களுக்கு மட்டுமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் முக்கியமான மேட்சாக பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு அணியின் ’கம்பேக்’ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல, ஓபனிங் பேட்ஸ் மேன்கள் ஷேன் வாட்சன், ஃபாப் டூ ப்ளெசிஸ் இருவரும் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர். 19ம் தேதி ஐபிஎல் போட்டிகள்…

சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் மூன்று முறை விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலாவது போட்டியில் வெற்றி பெற்றதை தவிர்த்து மற்ற இரு ஆட்டங்களிலும் தோல்வியே தழுவியுள்ளது. முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு அடுத்த இரண்டு ஆட்டங்களில் இல்லாததும் தோல்விக்கு காரணம் என…

44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் 2020 டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 131 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்துள்ளது.

ஃபுல் பார்மில் சிஎஸ்கே! – வீழ்த்துமா ராஜஸ்தான்?

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய சிஎஸ்கே இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோத உள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி ஒளிபரப்பாகிறது. இதுவரை முந்தைய போட்டிகளில் 21 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14 முறை சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது, 7 முறை ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே வெற்றி வாய்ப்பு சிஎஸ்கேவுக்கே அதிகம் உள்ளது. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ்…