Browsing: Cyclone Puravi

புரட்டிப்போட்ட ‘புரெவி’ புயல்- 10 இலட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின

இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் சின்னங்களால் இந்த பகுதி பேரழிவை சந்தித்துள்ளன. அதிலும் கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி புயல்களால் அப்பகுதி விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி பின்பு வலுவிழந்தாலும் அதன் தாக்கம் பலத்த மழையாக…

தமிழகத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

‘புரெவி’ புயல்லால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்துவரும் கனமழை இன்றும் நாளையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள, புரெவி புயலால் தமிழத்தில் கன மழை பெய்து வருகின்றது. இந்த புயல் மன்னார் வளைகுடா அருகே வந்தபோது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இதனால், காற்றின் வேகம் குறைந்து டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கனமழை பெய்யத் தொடங்கியது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில்…