Browsing: cyclone

வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். புரெவி புயல் காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது/இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகிய நிலையில் 60 ஆயிரத்துக்கு அதிகமான ஹெக்டர் நெற்பயிர்கள் நாசமாகின. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட முதல்வர் பழனிசாமி நேற்று நாகப்பட்டினத்திற்கு சென்றார். நேற்றிரவு வேளாங்கண்ணியில் தங்கிய முதல்வர் இன்று காலை நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகிறார். இந்நிலையில் நாகை…

புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நாளைக்குள் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வாரம் வங்க கடலில் உருவான நிவெர் புயல் காரைக்கால் அருகே கரையை கடந்தது. அது கரையை கடந்த அன்றே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறியது. புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் இலங்கை வழியாக தற்போது கன்னியாக்குமரி – பாம்பன் இடையே கரையை கடக்க நெருங்கி…

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் திருகோணமலையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ள அதேவேளை பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100…

டிசம்பர் 4 இல் பாம்பன் இடையே ‘புரெவி’ புயல் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இலங்கை திருகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல்…

புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் : ஆர்.பி.உதயகுமார்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரைதிரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மீனவர்கள் கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மதுரை வரை புயலின் தாக்கம் இருக்கும்- அமைச்சர் தகவல்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலை சமாளிக்க தேவையான நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.” என்றார். மேலும், “நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று…

சிலசமயம் காற்று குளிர்ச்சியாக இருப்பது ஏன்?

குளிர் காலங்களில், புவியின் வடக்குப் பகுதியில் உள்ள நாடுகளில் கடுங் குளிர் நிலவுகிறது. நடுங்கவைக்கும் அந்த நாடுகளில் வீசும் குளிர் காற்று வெதுவெதுப்பான கடல் மீது படிகிறது. இதையடுத்து கடல் காற்றும் குளிர்ச்சியாகிறது. எனவே, குளிர்காலம் தொடங்கி காற்று குளிர்ச்சியாகிறது.

வலுப்பெறும் புரெவி புயல் : எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது . தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது . இந்த புயல் காரணமாக டிசம்பர் 2,3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை,…

நாளை முதல் மூன்று நாள்களுக்குத் தென் மாவட்டங்களில் கன மழை – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியினால், நாளை முதல் மூன்று நாள்களுக்குத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும், மற்ற கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. மேலும், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், தமிழகக் கடலோர பகுதிகளில் பலத்தைக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள்…

தமிழக அரசு வெளியிட்ட நிவர் புயல் பாதிப்பு முதல் கட்ட அறிக்கை

நிவர் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மொத்தம் 101வீடுகள்சேதமடைந்துள்ளதாகவும் தமிழகஅரசுதரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.  புயல் கரையைக் கடக்கும்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயல் சேதம் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட  பட்டியலில், இந்தப் புயலால் மூன்று பேர் உயிர் இழந்திருப்பதாகவும், குடிசை வீடுகள் 89, ஓட்டு வீடுகள் 12 என மொத்தம் 101 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

புயலுக்கு பெயர் சூட்டப்பட்ட பிறகு வந்த புயல்கள் எத்தனை தெரியுமா?

தமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்… 1994 அக்., 31: வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னை அருகே, 130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கன மழைக்கு, 60 பேர் பலியாகினர். 2004க்கு முன் புயலுக்கு பெயர் நடைமுறை இல்லை. 2008 நவ., 26: ‘நிஷா’ புயல், நாகபட்டினம் – காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. 2010 நவ., 1: ‘ஜல்’ புயல், சென்னை அருகே மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில்…

சென்னைக்குள் வெளி மாவட்ட நபர்கள் நுழைய தடைவிதித்தது காவல்துறை

இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரில் பிரதான சாலைகள் மூடப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், போரூர். மணலி, ஈசிஆர், ஓம்ஆர் போன்ற பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர…