Browsing: d.k

பெரியார் திடலில் ஒரு பெரியார் தொண்டரின் அனுபவம்!

ஜூலை 8. எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள். 1998 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் பெரியார் திடலுக்கு பணியாளராக வந்தேன். 23ஆண்டுகள் உருண்டோடி விட்டன… 43 ஆண்டுகளில் 23 ஆண்டுகள் திடலில் கடந்துள்ளேன். ஆசிரியரின் சுற்றுப்பயணத்தில் உதவிக்கு செல்லும் தோழர்களில் ஒருவனாக பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் சில நாட்கள் பணியாற்ற அன்றைய துணை பொதுச்செயலாளர் சாமிதுரை அவர்களிடம் தோழர் சா.பகுத்தறிவாளன் வழியாக அணுகினேன். அவர் அப்போது அதற்கு வாய்ப்பில்லை என்றும், திடலில் வேறு…

தலைமுறைகளை பாதுகாத்த தலைமுறை இடைவெளி!

தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிதான் பல தலைமுறைகளுக்கு பாதுகாப்பளிக்க உதவியது என்பது எனது கருத்து. தந்தை பெரியாரின் கொள்கைகளில் வேறுபட்டு அண்ணா அவரிடமிருந்து விலகவில்லை. காலத்துக்கேற்ற மாற்றம் வேண்டும் என்ற அண்ணாவின் விருப்பத்தை பெரியார் தவறாக புரிந்துகொண்டார் என்பதே உண்மை. நமது கொள்கைகளை நிறைவேற்ற அரசுகளுக்கு எதிராக போராடி ஏன் சிரமப்பட வேண்டும்? விடுதலை நமக்கு அதிகாரத்தை பெறும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. நாமே ஏன் ஆட்சியை அமைத்து நமது கொள்கைகளுக்கு சட்ட…

வைக்கம் வீரர் பெரியார் – PERIYAR LIFE HISTORY – 5

1924 ஆம் ஆண்டு ராமசாமி நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதுவரை, திருச்சியில் இயங்கி வந்த காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை ஈரோட்டுக்கு மாற்றினார். தனது இல்லத்தையே அலுவலகமாக ஆக்கிக் கொண்டார். அந்த ஆண்டு மே மாதம் ராமசாமி நாயக்கருக்கு வைக்கம் நகரிலிருந்து ஒரு தந்தி வந்தது. பின்னர் ஒரு கடிதம் வந்தது. அதில் இருந்த விஷயம் பின்னாளில் இந்தியாவையே திரும்பச் செய்த முக்கியமான விஷயம். அது என்ன? திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் ஒரு சிறு…