Browsing: d.m.k.

புதிய விவசாயக் கண்டுபிடிப்புகளுக்கு பரிசு : வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை 14.08.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள் மற்றும் முக்கிய கொள்கை முடிவுகள் பின்வருமாறு. 1. 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை,…

சீமான் தம்பிகளுக்கு புத்தி எப்போ வரும்? – Arulraj

திமுகவின் அரசியல் ஆரம்பம் குறித்து நாம் தமிழர் தம்பிகள் தெரிந்து கொள்வதற்காக… 1949ல் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, அறிஞர் அண்ணாவின் தலைமையில் திமுக எனும் அரசியல் கட்சி உதயமாகிறது. 1952 ல் நடந்த சட்டமன்றத்தேர்தலில் தங்கள் நிபந்தனைகளுக்கு உட்படுவதாக வாக்குறுதி அளித்த சிறிய கட்சிகள், மற்றும் பல சுயேச்சைகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தது திமுக. திமுகவின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவின் சில கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்து உதாசீனப் படுத்தினர். தனது கொள்கைகளை…

ஸ்டாலினுக்கு நிகராக களத்தில் கனிமொழி!

கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், ஒரு அரசாங்கம் முன்னெடுக்காத நிவாரணப் பணிகளை திமுக நிறைவேற்றி வருகிறது. அனைத்து வசதிகளும் உள்ள அரசாங்கத்தால் முடியாத விஷயங்களை திமுக செய்துகாட்டி தானே ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவி எண்களைக் கொடுத்து அதை கேட்டு குறித்து, உரிய பகுதி திமுகவினருக்கு சொல்லி, உடனடியாக உதவிகள் கிடைக்கச் செய்கிறது. திமுகவின் அணிகளில் கனிமொழி தலைமையிலான மகளிரணியும் களத்தில் சிறப்பாக பணிபுரிகிறது. ஸ்டாலினுக்கு…