Browsing: dam

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீலகிரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.32 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 28 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 950 கனஅடி வீதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்கும், கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் பாசனத்துக்காக அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையின்…

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் நீா் திறப்பு

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீா் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசன பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுக்கை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கை வந்தன. அவர்களின் கோரிக்கையை ஏற்று கோவை-ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை “அ” மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் “அ” மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் “ஆ”,…

மேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு

காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கா்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு சுமார் 60,000 கனஅடி வீதம் தண்ணீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளின் உபரிநீா் வியாழக்கிழமை மாலை முதல் மேட்டூா் அணைக்கு வரத்தொடங்கியுள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால்,…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 101.38 அடியாகவும், நீர் இருப்பு 66.64 டிஎம்சியாகவும் உள்ளது.