Browsing: death

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 20 நாட்களேயான குழந்தையின் சடலத்தை ஏற்க பெற்றோர் மறுத்துள்ளனர். பிறந்து 20 நாட்களேயான சிசுவொன்று, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் உயிரிழந்தது. குறித்த சிசுவின் உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பி.சி.ஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும்,…

பைக்கில் சென்ற தாய், மகள் உயிரிழப்பு: மழைநீர் வடிகால்வாயை மூடுமாறு வலியுறுத்தும் ஸ்டாலின்

பைக்கில் சென்ற தாய் மற்றும் மகள் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, மழைநீர் வடிகால்வாயை உடனே மூட வேண்டும் என அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து தாய் கரோலினா, அவரது மகள் இவாலின் ஆகிய இருவரும் உயிரிழந்த கொடூரமான நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட…

வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்: நடந்தது என்ன?

கனடாவில் உள்ள ஓரு வீட்டில் ஆண் மற்றும் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கனடாவில் உள்ள ஹால்டனில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வீட்டில் ஆண் மற்றும் பெண் பேச்சுமூச்சின்றி கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றனர். அதன்படி ப்ரோண்டி தெரு பகுதியில் உள்ள வீட்டை அவர்கள் அடைந்தனர். அங்கு ஆண் மற்றும் பெண் பேச்சு மூச்சின்றி கிடந்த நிலையில் அவர்களை பரிசோதித்த போது இருவரும் இறந்துவிட்டது தெரியவந்தது. இது…

நடிகர் தவசி காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்.’கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் தவசி. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில், சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது, ரசிக்கப்பட்டது. இவர் பாரதிராஜாவின், ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.   கிடா மீசையில் பல படங்களில் நடித்து வந்த தவசி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.…

கலைஞரின் சாதனைகளை நினைவூட்டும் ஸ்டாலின் கடிதம்

கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவருமான கலைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 94ஆவது வயதில் காலமானார். கலைஞருடைய இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த வருடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைதிப் பேரணி, முரசொலி அலுவலகத்தில் கலைஞர் சிலை திறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. கொரோனா…

திருமாவளவனை கலங்கடித்த மரணம்

தமிழக அரசியல் களத்தில் தனது தனித்துவமான அரசியலால் அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்த்து வருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல் திருமாவளவன் அவரது சகோதரி கு.பானுமதி@வான்மதி உடல்நல குறைவால் நேற்றைய தினம் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார் அது சம்பந்தமாக அவர் வெளியிட்டிருக்கும் கடிதம் கல்நெஞ்சையும் கலங்கடிப்பதாக இருக்கிறது எனது உடன்பிறந்த தமக்கை கு.பானுமதி என்கிற வான்மதி எனக்கு ‘அக்கா என்னும் அம்மா ‘ ! அவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக வாழாமல் எனக்காக…

ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று கொரோனா தொற்றால் ஒரே நாளில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 1,00,877 பேரில் 12,436 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்றால் இதுவரை 2,140 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுக்கடைகளை திறப்பது சாவின் ஒத்திகை – வைரமுத்து

கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார். “மது என்பது அரசுக்கு வரவு; அருந்துவோருக்கு செலவு. மனைவிக்கு சக்களத்தி; மானத்தின் சத்ரு. சந்தோஷக் குத்தகை; சாவின்…