Browsing: deepika padokone

நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

மும்பையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சம்மனை தொடர்ந்து ஆஜரான தீபிகா படுகோனிடம் போதைப் பொருள் வாங்கினாரா? பயன்படுத்தினரா? என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

தீபிகாவுக்கு யாருடைய யோசனையும் தேவையில்லை!

பாஜக எதை எதிர்க்கிறதோ அதை ஆதரிப்பதும், எதை ஆதரிக்கிறதோ அதை எதிர்ப்பதும் இந்தியாவில் புதிய ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தீபிகா படுகோன். ஏற்கெனவே இவர் நடித்த பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து அந்த படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் உருவாக்கின. அந்தப் படம் வசூல்ரீதியில் வெற்றி பெற்றதற்கு இந்த எதிர்ப்பும் முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில்தான், ஆர்எஸ்எஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த…