Browsing: delhi

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு- 8 ஆம் தேதி லாரி ஸ்டிரைக்

விவசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவாக வட இந்தியாவில் 8-ஆம் தேதி முதல் லாரிகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் திரண்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், விவசாயிகளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) தலைவர் குல்தரன்சிங் அத்வால் கூறுகையில், “விவசாயிகளின் போராட்டத்திற்கு ஏஐஎம்டிசி தனது…

டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனாத் தொற்று

டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 86 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,74,380 ஆக அதிகரித்துள்ளது. 5,33,351 பேர் குணமடைந்துள்ளனர். 9260 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 31,769 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டாஸ் வென்ற கோலி முதலில் பேட்டிங்

ஐபிஎல் திருவிழாவில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பரபரப்பாக இரு போட்டிகள் நடந்தன. அதிலும் பஞ்சாப் வென்ற போட்டி செம த்ரில். ஐபிஎல் தொடரில் இன்று முக்கியமான போட்டி காத்திருக்கிறது. இன்று மோதிக்கொள்ளப்போவது கோலி தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள். பெங்களூர் அணி இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி, நான்கில் வென்று 8 புள்ளிகளோடு 4 -ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியும் ஆறில் விளையாடில் நான்கில் வென்றிருந்தாலும் நெட் ரன்ரேட்…

59 ரன்கள் வித்தியாசத்தால் டெல்லி அணி வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் வீரர்களில் பெரிய மாற்றம் இல்லாமலேயே களத்தில் இறங்கினர். டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ப்ரித்வி ஷாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 42 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்த டெல்லி அணியில் ஸ்டாய்ன்ஸ் அதிரடியாக விளையாடி 53 ரன்களை குவித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து…

18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி

சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும் களமிறங்கின. இந்த போட்டி நடைபெறும் மைதானம் மிகவும் சிறிதாக இருப்பதால் வீரர்கள் சிக்சர்களை அடித்து நொறுக்கினர். டாஸ்- ஐ வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்திலிருந்து நன்கு விளையாடி20 ஓவர் முடிவில் 228 ரன்களை பெற்று 4 விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு: கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை நாடே எதிர்ப்பார்த்து காத்துக்கிடந்தது. கடந்த 1992 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கத்தியார் உட்பட 32…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கேள்வி நேரம் இல்லை?

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நாடாளுமன்றம் ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அக்டோபர் 1ஆம் தேதி முடிவடைகிறது. சமூக இடைவெளியுடன் கூடிய கூட்டத்தொடராக நடைபெறும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு 16 சட்ட திருத்தங்கள் நான்கு புதிய சட்ட மசோதாக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்று, புலம்பெயர் தொழிலாளர்கள், சீன எல்லைப் பிரச்சினை, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை வழங்காமை, இந்தியாவின் ஜிடிபி…

பிரியங்கா முயற்சியால் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய சச்சின் பைலட்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கி சரியாக ஒரு மாதத்துக்குப் பின் நேற்று ஆகஸ்டு 10 அன்றுமீண்டும் காங்கிரசையே தேடி வந்து சமரசமாகியிருக்கிறார் அம்மாநில துணை முதல்வர், காங்கிரஸ் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்ததன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் சச்சின் பைலட். அதேநேரம் வரும் 14 ஆம் தேதி ராஜஸ்தான்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி தென்பட்டதை அடுத்து சோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஓர் ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல், பால்யப் பருவத்தை எட்டியிருந்த…

இந்தியாவில் தொற்று பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கியது

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றும் தணியாமல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 606 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வாரம் தொடக்கம் முதல் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. இதையடுத்து, தொடர்ந்து 5வது…

இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 7,93,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 475 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால்…