Browsing: Dhanush

கர்ணன் பெயரை தனுஷ் நடிக்கும் படத்திற்கு வைக்க எதிர்ப்பு

சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் அதன் தலைவர் கே. சந்திரசேகரன் நடிகர் தனுஷ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம்.   நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான்.   ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும்.  ஏனெனில். அந்தப் பெயர்களே திரைப்படத்தின்…

கர்ணன் படப்பிடிப்பு முடிவடைந்தது

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் ‘கர்ணன்’. ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். கொரானோ ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அது குறித்து படத்தின் நாயகன் தனுஷ், “கர்ணன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதைக் கொடுத்ததற்கு மாரி செல்வராஜுக்கு…

தனுஷ் நடிக்கும் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் நீக்கம்

தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் மற்றும் அக்‌ஷய்குமாருடன் இந்திப் படமான ‘அட்ராங்கிரே’. இவ்விரு படங்களுக்குமான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.இந்த நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருக்கிறார். தனுஷின் 43ஆவது படமாக இது தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் நாயகி மாளவிகா…

அண்ணனுக்காக தனுஷ் நடிக்கும் படம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீஸூக்கு தயாராகியிருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. இந்தப் படம் தொடர்ந்து, பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ மற்றும் இந்தி படமான ‘அட்ராங்கி ரே’ படத்திலும் நடித்து வருகிறார். கர்ணன் படத்தில் மலையாள நடிகர் லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகிபாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷூடன் நடித்துவருகிறார்கள். இந்தப் படத்தின் பட வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதுபோல, ஆனந்த் எல்.ராய்…

இந்த காம்போ பாத்து எவ்ளோ நாள் ஆச்சு…

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த ‘3’ திரைப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு முன்னரே ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் உலகளவில் பிரபலம் ஆகிவிட்டார் அனிருத். பின்னர் கோலிவுட்டில் பல படங்களுக்கு இசையமைத்த அனிருத், தனுஷின் பேவரைட் இசையமைப்பாளராக இருந்து வந்தார். தனுஷின் வேலையில்லா…

வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளது உண்மைதான் என தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே வெற்றிப்படங்கள் தாம்.இதனிடையே, மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி…

செல்வராகவன்-சந்தானம் இணையும் மன்னவன் வந்தானடி

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி என்கிற படம் 2016 டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்தார். யுவன் இசையமைக்கிறார். பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. படத்தின் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது. அதன்பின், பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம் நடக்காமல் இருந்தது. இப்போது அந்தப் படத்துக்கு விடிவு காலம் பிறந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் சிக்கல்களைப் பற்றி கேட்டறிந்து கொண்ட தயாரிப்பாளர் வருண் மணியன், அவற்றைச் சரி செய்து…

தனுஷ் ரசிகர்மன்ற விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்

நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28. அவர் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் வி.சுப்ரமணியம் சிவா மற்றும் செயலாளர் பி.ராஜா ஆகியோர் ஆலோசையின்படி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தாம்பரம் தி மு க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவைத் துவக்கிவைத்தார் . ஊனமுற்றோர் 2 பேருக்கு மூன்று…

பாரதிராஜாவுக்கு உயரிய விருது வழங்ககோரி 36 கலைஞர்கள் கடிதம்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி தமிழ்த்திரையிலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைக் கடிதம்……. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல், ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் – தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கோரிக்கை. மாண்புமிகு திரு…