Browsing: dindugul

பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை

அதிமுகவினருக்கு சாதகமான பேரூராட்சிகளையும் வார்டுகளையும் குறிவைத்து சுழற்சிமுறையில் தில்லுமுல்லு செய்து மீண்டும் மீண்டும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிட முடியாதபடிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி முதல் 10 ஆண்டுகள் ஆண்களுக்கான தனித்தொகுதியாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகள் பெண்களுக்கான பொதுத்தொகுதியாக இருந்தது. இப்போது மீண்டும் ஆண்களுக்கான தனித்தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிடாமல் தடுக்க இந்த ஏற்பாடு…

ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

திண்டுக்கல்: மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்ட கட்டணத்தை 3 ஆயிரத்தில் இருந்து ஆயிரம் ரூபாயாக குறைக்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும், அந்த மனுவில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் கட்டணத்தை ஆயிரமாக குறைக்கவும், இந்த திட்டத்தில் அனைத்து உட்கடை கிராமங்களையும் விடுபடாமல் இணைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், கிராமப்புற ஊராட்சிகளில் தலித் பெண் பிரதிநிதிகளை உரிய முறையில் மரியாதையுடன் நடத்துவதை…

திண்டுக்கல்லில் இருந்து 43 கொரோனா நோயாளிகள் கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து 43 கொரோனா நோயாளிகள் கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் கரூருக்கு மாற்றப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.