Browsing: dmdk

அமித்ஷாவை நள்ளிரவில் சந்தித்த தேமுதிக தலைவர்

பாஜக முதன்மைத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நவம்பர் 21 பிற்பகல் முதல், நவம்பர் 22 ஆம் தேதி முற்பகல் வரை சென்னையில் இருந்தார். 21 ஆம் தேதி அவர் கலந்துகொண்ட கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில் கூட்டணிக் கட்சிகளான பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக சார்பில் இளைஞரணிச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசு நிகழ்ச்சி முடிந்து அமித் ஷா மீண்டும் தான் தங்கிய லீலா பேலஸ் ஹோட்டலுக்குச் சென்றுவிட்ட நிலையில்,…

பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா உறுதி!

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, அண்மையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் கரோனா இல்லை எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’மதுரைக்காரன் மன உறுதி நோயிலுருந்து காப்பாற்றும்’’ – விஜயகாந்தை வாழ்த்திய வைரமுத்து!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது நண்பரும்…

தனித்து களமிறங்க விரும்பும் தேமுதிக

விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி இன்றுடன் (செப்டம்பர் 14) 15 ஆண்டுகள் முடிந்து 16 ஆம் ஆண்டு தொடங்குகிறது. அண்மையில் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி மாவட்டச் செயலாளர்களுடன் காணொலியில் பேசிய பொருளாளர் பிரேமலதா, “தொண்டர்களும், நிர்வாகிகளும் தனித்து நிற்பதையே விரும்புகிறார்கள். நாம் வைத்த கூட்டணியால் நம்மை விட அவர்களே ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்”என்று அதிமுகவைத் தாக்கினார். பின், ‘மாற்று அரசியலை தேமுதிகவே முன்னெடுக்கும். பூனைக்கு மணி கட்டுவோம்’ என்றும் கூறினார் பிரேமலதா. இந்த சூழலில் தேமுதிகவின் 16…